உள்ளாட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க ஒப்பந்தப் புள்ளி கோரியது தேர்தல் ஆணையம்

உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. 
உள்ளாட்சித் தேர்தல்: வாக்குச் சீட்டுகளை அச்சடிக்க ஒப்பந்தப் புள்ளி கோரியது தேர்தல் ஆணையம்


உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகளை மாநிலத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தியுள்ளது. 
கிராமப்புற ஊராட்சிகளில் பயன்படுத்தப்படும் வாக்குச் சீட்டுகளை அச்சிட ஒப்பந்தப் புள்ளிகளை கோரியுள்ளது. தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் பணிகளை தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. இதற்கான பூர்வாங்கப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், ஊரகப் பகுதிகளுக்கான  வாக்குச் சீட்டுகளை அச்சிடும் பணிகளை முடுக்கி விடப்பட்டுள்ளது. அதன்படி, பேரூராட்சி, நகராட்சித் தலைவர் மற்றும் மாநகராட்சி மேயர் தேர்தலில் பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிறம் கொண்ட காகிதங்களை கொள்முதல் செய்ய தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.
இதேபோல, சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் தேர்தலில் நீல நிறத்தில் வாக்குச் சீட்டுகள் பயன்படுத்தப்படும். இதற்கான காகிதங்களை இப்போதே கொள்முதல் செய்திட தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. நீல நிறத்திலான காகிதமும், இளஞ்சிவப்பு நிறத்திலான காகிதமும் தேவை எனவும், தகுதியுடையவர்கள் வரும் 20-ஆம் தேதிக்குள் மூடி முத்திரையிடப்பட்ட உறையில் தொழில்நுட்ப அம்சங்களைக் குறிப்பிட்டு அனுப்ப வேண்டுமெனவும் மாநிலத் தேர்தல் ஆணையம் கோரியுள்ளது. அன்றைய தினமே ஒப்பந்தப் புள்ளிகள் திறக்கப்பட்டு தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர் எனவும் கேட்பு அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலை நடத்த ஆயத்தம்: வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்ந்து தள்ளிப் போடப்பட்டு வந்தது. இந்த நிலையில், வாக்குச் சீட்டுகளுக்கு ஒப்பந்தப் புள்ளிகள் கோருவது, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களைத் தயார் நிலையில் வைப்பது போன்ற பணிகள் மூலமாக உள்ளாட்சித் தேர்தலுக்கு தன்னை முழுவீச்சில் தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தயார்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com