முதலீட்டாளர்கள் மாநாடு மக்களை ஏமாற்றும் நாடகம்:  மு.க.ஸ்டாலின்

அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடு என்பது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
முதலீட்டாளர்கள் மாநாடு மக்களை ஏமாற்றும் நாடகம்:  மு.க.ஸ்டாலின்


அதிமுக ஆட்சியில் முதலீட்டாளர்கள் மாநாடு என்பது மக்களை ஏமாற்றும் நாடகம் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னையில் வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவர் பேசியது:
முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து, புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்து போட்டதில், எவ்வளவு ஒப்பந்தங்கள் முடிவாகியிருக்கிறது. எவ்வளவு பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது? இதனை வெள்ளை அறிக்கையாக வெளியிடுங்கள் என்று கூறுகிறோம்.  உடனே, அமைச்சர்கள் அனைவரும் வெள்ளை அறிக்கை கிடையாது என்கின்றனர்.  திமுக ஆட்சியில் இருந்தபோது வெள்ளை அறிக்கை வெளியிட்டதா என்று அமைச்சர் ஜெயக்குமார் கேட்டுள்ளார்.
வெளிநாட்டுக்கு நான்  துணை முதல்வராக, உள்ளாட்சித் துறை அமைச்சராகத்தான் சென்றேன். முதலீட்டை பெறுவதற்காகச் செல்லவில்லை.  ஆனால், முதலீட்டைப் பெறுவதற்காக என்று கூறித்தான் இவர்கள் சென்றனர். அதனால்தான் வெள்ளை அறிக்கையை வெளியிடுங்கள் என்று கூறுகிறோம்.
சென்னையைச் சுற்றி இப்போது கம்பீரமாக ஓடிக்கொண்டிருக்கிறது மெட்ரோ ரயில். அதற்காக, ஜப்பான் நாட்டுக்கு சில அதிகாரிகளை மட்டும் அழைத்துச் சென்றேன். அதைப்போல  ராமநாதபுரம் கூட்டுக்குடி நீர் திட்டம்,  ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, அதற்குரிய நிதியைப் பெற நாங்கள் சென்றோம். அதைப் பெற்றும் தந்துள்ளோம்.  ஆனால், அதிமுக அமைச்சர்கள் சுற்றுலாவுக்குச் செல்வதுபோல சென்று வந்துள்ளனர். அதிமுக ஆட்சி முடிவடைவதற்கு இன்னும் ஒன்றரை ஆண்டுகள்தான் இருக்கின்றன. அதற்குள் எல்லா நாட்டுக்கும் சென்று வந்துவிட வேண்டும் என்று ஒரே முடிவோடு செல்கின்றனர். 
 தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி, ஜெயலலிதா உயிரோடு இருந்த நேரத்தில் ரூ.2.42 லட்சம் கோடி முதலீட்டைப் பெற்று வேலை வாய்ப்பைக் கொடுப்போம் என்று கூறியது குறித்து கேட்கப்பட்டுள்ளது. 
அதற்கு ரூ.14 ஆயிரம் கோடிதான் முதலீடு வந்திருக்கிறது என்று மிகத் தெளிவாக விளக்கம் தரப்பட்டிருக்கிறது. இதற்கு முதல்வர் என்ன பதில் சொல்லப்போகிறார்? எனவே, உலக முதலீட்டாளர் மாநாடு என்பது மக்களை ஏமாற்றுவதற்காக நடத்தப்படும் நாடகம் என்று அவர் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com