மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை திட்டம்: நிலம் கையகப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும்: அன்புமணி ராமதாஸ்

மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.
மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் பணியை ஆய்வு செய்த மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ்.


மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு தேவையான நிலங்களைக் கையகப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என்று மாநிலங்களவை உறுப்பினர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம், மொரப்பூரில், மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் பணிகளை அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.  பின்னர்,  அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
மொரப்பூர் முதல் தருமபுரி வரையிலான இணைப்பு ரயில்வே பாதை அமைக்கும் திட்டம், தருமபுரி மாவட்ட மக்களின் 78 ஆண்டு கால கனவுத் திட்டமாகும். இந்தத் திட்டத்துக்காக பாமக தொடர்ந்து போராடியும், வலியுறுத்தியும் வந்தது. இதையடுத்து, மத்திய அரசை பலமுறை வலியுறுத்தி அழுத்தம் கொடுத்ததால், மொரப்பூர்-தருமபுரி இணைப்பு ரயில் பாதை அமைக்கும் திட்டத்துக்கு ரூ.358.95 கோடி நிதியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.
மேலும், முதல்கட்டப் பணிகளுக்கு ரூ.10 லட்சம் நிதி ஒதுக்கப்பட்ட நிலையில், ரயில்வே துறை சார்பில் மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை செல்லும் இடங்களில் எல்லைக் கற்கள் அமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதையானது 36 கி.மீ. தொலைவு கொண்டதாகும். இதில்  28 கி.மீ. தொலைவுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. சுமார் 8 கி.மீ. தொலைவுக்கு ரயில்வே துறைக்கு சொந்தமான நிலங்ளை பொதுமக்கள் ஆக்கிரமித்துள்ளனர்.  ஆக்கிரமிப்பு பகுதிகளில் உள்ள நிலங்களை கையகப்படுத்த தமிழக அரசு உதவ வேண்டும் என ரயில்வே துறையினர் கோரிக்கை விடுத்துள்ளனர். எனவே, ரயில்வே பாதைக்கு தேவையான இடங்களை தமிழக அரசு கையகப்படுத்தி தர வேண்டும்.
நிலம் கையகப்படுத்தப்பட்டு ரயில்வே துறைக்கு தமிழக அரசு வழங்கினால், ஓரிரு ஆண்டுகளில் மொரப்பூர்-தருமபுரி ரயில் பாதை அமைக்கும் திட்டம் நிறைவேறும். மேலும், இந்தத் திட்டத்துக்கு கூடுதல் நிதி தேவைப்பட்டால் மத்திய அரசிடம் கேட்டுப் பெறுவேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com