சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல் 

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.
சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல் 

பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல் தெரிவித்தார்.

சென்னை குரோம்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). பொறியாளரான இவர், கடந்த 12-ஆம் தேதி துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் இருசக்கர வாகனத்தில் பள்ளிக்கரணை அருகே செல்லும்போது, அங்கு சாலையின் நடுவே தடுப்பின் மீது கட்டப்பட்டிருந்த திருமண வரவேற்பு பேனர் திடீரென சுபஸ்ரீ மீது விழுந்தது. இதில் அவர் நிலைத்தடுமாறி சாலையில் விழுந்தார். 

அப்போது பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது மோதியதில், அவர் இறந்தார். இச் சம்பவம், பொதுமக்களிடம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.சென்னை உயர்நீதிமன்றமும் கடும் கண்டனத்தை தெரிவித்தது. இது குறித்து பரங்கிமலை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் தண்ணீர் லாரி ஓட்டுநர் மனோஜை கைது செய்து, இந்திய குற்றவியல் சட்டம் 279, 336, 304(ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். 

அதேபோல, தனது மகன் திருமணத்துக்காக அந்தப் பகுதி முழுவதும் அனுமதியின்றி பேனர் வைத்ததாக அதிமுக பிரமுகர் ஜெயகோபாலையும், இவ் வழக்கின் இரண்டாவது குற்றவாளியாக போலீஸார் சேர்த்தனர். ஆனால், ஜெயகோபால் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகிறார். இந்நிலையில் பேனர் விழுந்த விபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீயின் குடும்பத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேரில் ஆறுதல் தெரிவித்தார். 

உடன் கட்சியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் அ. பாக்கியம், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ். நரசிம்மன் ஆகியோர் உடனிருந்தனர். இதனிடையே சுபஸ்ரீயின் பெற்றோரை திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com