வடகிழக்குப் பருவ மழை: முன்னேற்பாடுகள் தீவிரம்: அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்

வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
நாகை ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். உடன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், 
நாகை ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் பேசிய வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார். உடன், கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன், 


வடகிழக்குப் பருவ மழையை எதிர்கொள்ளக்கூடிய வகையில் முன்னேற்பாடு நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
வடகிழக்குப் பருவமழை முன்னேற்பாடுகள் குறித்து, நாகை ஆட்சியரகத்தில் அனைத்துத்துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு தலைமை வகித்து அமைச்சர்ஆர்.பி.உதயகுமார்  பேசியது:
நாகை மாவட்டத்தில் மழையால் பாதிக்கக்கூடிய 187 இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த இடங்களில் பணியாற்றுவதற்காக 4,464 முதல் நிலை பணியாளர்களுக்கு உரிய பயிற்சியளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர். கிராமங்களில் பணியமர்த்தப்படவுள்ள முதல்நிலை பொறுப்பாளர்களின் செல்லிடப்பேசி எண்கள் அடங்கிய புத்தகம் தயார் செய்யப்பட்டு அனைத்து துறை அலுவலர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளன. இதன் மூலம்  பேரிடர் காலங்களில் கிராமத்தில் நடைபெறும் ஒவ்வொரு நிகழ்வும், மாவட்ட நிர்வாகத்தின்  கவனத்துக்கு  கொண்டுவரப்பட்டு, உடனடி தீர்வு காணப்படும். இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக கால்நடைகளுக்கான முதல்நிலை பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பேரிடர் காலங்களில் அரசு அதிகாரிகள் 24 மணி நேரமும் மாவட்ட நிர்வாகத்துடன்  தொடர்பில் இருப்பதற்கான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
  கைத்தறி மற்றும் துணி நூல்துறை அமைச்சர் ஓ.எஸ். மணியன் பேசியது:
 நாகை மாவட்டத்தில் 9 பல்நோக்குப் பாதுகாப்பு மையங்கள், 23 புயல்  பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாம்களாக பயன்படுத்துவதற்காக 465 பொது மற்றும் தனியார் கட்டடங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தேசிய பேரிடர் நிவாரணப்படை, மாநில பேரிடர் நிவாரணப்படை வீரர்களை தங்க வைப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. மாவட்டத்தில் 2,149 குளங்கள் தூர்வாரப்பட்டுள்ளன. வெள்ளம்  ஏற்படாத வகையில் மாவட்டத்தில் உள்ள ஆறுகள் தூர்வாரப்பட்டுள்ளன.
13,600 மின்கம்பங்கள் 90 கிலோ மீட்டர்  நீளத்துக்கான மின் கம்பிகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன. 19,700 மணல் மூட்டைகள் மற்றும் அதற்கு சவுக்கு மரங்கள் வெள்ள பாதிப்பு ஏற்படும் தயார் நிலையில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.  எனவே, வடகிழக்குப் பருவமழை ஏற்படும்போதும் அதை சமாளிப்பதற்கும், எதிர்கொள்வதற்கும் தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என்றார் அவர்.
கூட்டத்துக்கு, கூடுதல் தலைமைச் செயலாளரும், வருவாய்த்துறை ஆணையருமான கே. சத்யகோபால், மாவட்ட ஆட்சியர் சீ.சுரேஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சட்டப் பேரவை உறுப்பினர்கள் எஸ்.பவுன்ராஜ் (பூம்புகார்), பி.வி.பாரதி (சீர்காழி), ஆர்.ராதாகிருஷ்ணன் ( மயிலாடுதுறை), எம். தமிமுன் அன்சாரி (நாகப்பட்டினம்),  உ.மதிவாணன் (கீழ்வேளூர்), மாவட்ட வருவாய் அலுவலர் மு.இந்துமதி, நாகை சார் ஆட்சியர் ஏ.கே. கமல் கிஷோர், மயிலாடுதுறை வருவாய் கோட்டாட்சியர் மு. கண்மணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மீ. செல்வக்குமார் மற்றும் அரசுத்துறை அதிகாரிகள் கூட்டத்தில் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com