ஓய்வுபெற்ற போக்குவரத்துப் பணியாளர்களுக்கு ரூ.1,093 கோடிக்கு பணப் பயன்கள்

ஓய்வுபெற்ற போக்குவரத்துப் பணியாளர்கள் 6 ஆயிரத்து 283 பேருக்கு ரூ.1,093 கோடிக்கான ஓய்வூதியப் பணப் பலன்கள் அளிக்கும் நிகழ்வை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார்.
ஓய்வு பெற்ற 6,283 பணியாளர்களுக்கு ரூ.1,093 கோடிக்கான ஓய்வூதியப் பணப் பயன்களை வழங்கிடும் அடையாளமாக  ஓய்வு பெற்ற பணியாளர்கள் 9 பேருக்கு காசோலைகளை தலைமைச் செயலகத்தில்  வழங்கிய முதல்வர் 
ஓய்வு பெற்ற 6,283 பணியாளர்களுக்கு ரூ.1,093 கோடிக்கான ஓய்வூதியப் பணப் பயன்களை வழங்கிடும் அடையாளமாக  ஓய்வு பெற்ற பணியாளர்கள் 9 பேருக்கு காசோலைகளை தலைமைச் செயலகத்தில்  வழங்கிய முதல்வர் 


ஓய்வுபெற்ற போக்குவரத்துப் பணியாளர்கள் 6 ஆயிரத்து 283 பேருக்கு ரூ.1,093 கோடிக்கான ஓய்வூதியப் பணப் பலன்கள் அளிக்கும் நிகழ்வை முதல்வர் பழனிசாமி தொடக்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
அரசுப் போக்குவரத்துக் கழகங்களுக்கு கடந்த எட்டு ஆண்டுகளில் பங்கு மூலதன உதவி, வழிவகை முன்பணம், உதவித் தொகை, மாணவர் கட்டணச் சலுகையை ஈடு செய்தல் ஆகிய வகைகளில் ரூ.1,040 கோடியே 9 லட்சம் வரை தமிழக அரசு வழங்கியுள்ளது.
குறிப்பாக, ஓய்வுபெற்ற போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்க வேண்டிய சேமநலநிதி, பணிக்கொடை, விடுப்பு ஒப்படைப்பு ஊதியம், ஓய்வூதிய ஒப்படைப்பு ஆகிய சட்ட ரீதியான பணப் பலன்கள் மற்றும் தாமதமாக வழங்கப்பட்ட ஓய்வூதிய நிலுவைத் தொகைக்கான வட்டி முதலியவை வழங்கப்பட்டுள்ளன. கடந்த 2018-ஆம் ஆண்டு மார்ச் வரை ஓய்வுபெற்ற அரசு போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு சட்ட ரீதியான பணப் பயன்கள் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கடந்த மார்ச் (2019) வரை ஓய்வுபெற்ற அரசுப் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணப் பயன்களாக ரூ.1,093 கோடி நிலுவை இருந்தது. இந்தத் தொகையை வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். இந்த உத்தரவின் அடிப்படையில், 6 ஆயிரத்து 283 பணியாளர்களுக்கு ரூ.1,093 கோடிக்கான ஓய்வூதியப் பணப் பயன்களை அளித்திடும் அடையாளமாக 9 பேருக்கு அதற்கான காசோலைகளை முதல்வர் பழனிசாமி அளித்தார்.
இந்த நிகழ்ச்சியில், போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், தலைமைச் செயலாளர் க.சண்முகம், போக்குவரத்துத் துறை முதன்மைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com