வாக்காளர் பட்டியலை 15 நாள்களில் வெளியிட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு

உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியலைத் தயாரித்து 15 நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலை 15 நாள்களில் வெளியிட வேண்டும்: மாநில தேர்தல் ஆணையம் உத்தரவு


உள்ளாட்சித் தேர்தலில் பயன்படுத்தப்படவுள்ள வாக்காளர் பட்டியலைத் தயாரித்து 15 நாள்களுக்குள் வெளியிட வேண்டும் என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, ஆணையம் வெளியிட்ட உத்தரவு விவரம்:-
 சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர்கள் பட்டியலின் அடிப்படையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தலுக்கும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிக்க வேண்டும். இதன்படியே, நடைபெறவுள்ள ஊரகம் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் தேர்தலுக்கான வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். இந்தப் பணிகளை வரும் அக்டோபர் 5-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியலை வெளியிடும்போது வாக்குச் சாவடி பட்டியலின் வரைபடத்தையும் இணைக்க அறிவுறுத்தப்படுகிறது. புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை வரும் 30-ஆம் தேதிக்குள் தேர்தல் அலுவலர்கள் பதிவிறக்கம் செய்ய வேண்டும். வாக்காளர் பட்டியலை அச்சுப் பணிக்கு வழங்கி அதனை அக்டோபர் 3-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும். வாக்காளர் பட்டியலை அக்டோபர் 4-இல் வெளியிட்டு அதனை அரசியல் கட்சிகளுக்கு அளிக்க வேண்டும்.
முழுமையாக சரிபார்க்க வேண்டும்: சட்டப் பேரவைத் தொகுதி வாக்காளர் பட்டியல்களில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் பெயர்கள் ஏதும் விடுபடவில்லை என்பதை 100 சதவீதம் சரிபார்க்க வேண்டும். பெயர்கள் விடுபட்டிருந்தால் துணைப் பட்டியலை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
வாக்காளர் பட்டியல்களில் பாகம் அல்லது வார்டு எண்கள் தவறாக இருந்தால் அதனை சரி செய்து திருத்தங்கள் அடங்கிய துணைப் பட்டியலை வெளியிட வேண்டும். வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாள் வரை மேற்கொள்ளப்படும் அனைத்து மாற்றங்களையும் சேர்த்து, திருத்தங்கள் அடங்கிய துணைப் பட்டியல்களை வெளியிடலாம்.
அலுவலர்களே பொறுப்பு: உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளர் பட்டியல்களைக் கவனத்துடன் தவறுகள் ஏற்படாத வகையில் தயாரிக்க வேண்டும். தவறு ஏற்பட்டால் அதற்கு வாக்குப் பதிவு அலுவலர்கள் பொறுப்பு என்று தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com