விருப்பப் பாடமான பகவத் கீதை: எதிர்ப்பின் காரணமாக பின்வாங்கிய அண்ணா பல்கலைக்கழகம்

அறிவிப்பிற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து பகவத் கீதையை  விருப்பப் பாடமாக மாற்றியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா பல்கலைக்கழகம்

சென்னை: அறிவிப்பிற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து பகவத் கீதையை  விருப்பப் பாடமாக மாற்றியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின் MIT,CEG,ACT மற்றும் SAP வளாக முதலாமாண்டு மாணவர்களுக்கு 2019-ஆம் ஆண்டுக்கான பாடத்திட்டத்தில், பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவப்பாடப் படிப்பு அறிமுகம் செய்யப்பட்டது.

அகில இந்திய தொழில் நுட்பக் கழகத்தின் பரிந்துரையின் பேரில் இந்த முடிவு  எடுக்கப்பட்டதாக கூறப்பட்டது. ஆனால் இதற்கு திமுக,மார்க்சிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் கடும் கணடனம் தெரிவித்தன.

இந்நிலையில் அறிவிப்பிற்கு எழுந்த எதிர்ப்பையடுத்து பகவத் கீதையை  விருப்பப் பாடமாக மாற்றியுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம்  அறிவித்துள்ளது.

அதன்படி பகவத் கீதையை உள்ளடக்கிய தத்துவப்பாடத்தை விருப்பப்பாடமாக மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும், எனவே அதனை விருப்பமுள்ள மாணவர்கள் மட்டும் படிக்கலாம் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா தகவல் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com