வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: அக். 22ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்

நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4- ஆகச் சுருக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில்
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு: அக். 22ல் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்



சென்னை: நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4- ஆகச் சுருக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதி என அதன் பொது செயலர் சி.எச்.வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4- ஆகச் சுருக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் அக்டோபர் 22 ஆம் தேதி வேலை நிறுத்தம் ஈடுபடப்போவதாக ஏற்கெனவே 'நோட்டீஸ்' வழங்கி உள்ளோம். வங்கிகள் இணைப்பு குறித்து பேச குழு அமைக்கப்படும் என மத்திய நிதித்துறை செயலர் உறுதி அளித்தார். அதனால் வங்கி அதிகாரிகள் சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தை திரும்பப் பெற்றது.  

ஆனால் நாங்கள் நாட்டின் 10 வங்கிகளை இணைத்து 4- ஆகச் சுருக்குவது என்ற அரசின் முடிவை எதிர்த்து வேலை நிறுத்தம் அறிவித்துள்ளோம். அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவது உறுதி. முதல் முறையாக ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட உள்ளோம். அதன் பின்பு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவுகள் மேற்கொள்ளப்படும் என கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com