நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக வெற்றி பெறுவார்: மு.க.ஸ்டாலின்

நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக வெற்றி பெறுவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக வெற்றி பெறுவார்: மு.க.ஸ்டாலின்

நாங்குனேரி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் அமோக வெற்றி பெறுவார் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

இன்று திமுக தலைவரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் நாங்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில், காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்றுவது குறித்தும், வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையிலும் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அதில், நாங்குனேரி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடுவது என்று ஏற்கனவே முடிவு செய்யப்பட்டதை அடுத்து, அக்கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளரான ரூபி மனோகரனும் மற்றும் காங்கிரஸ் கட்சியின் தலைவர்களும் இன்று மாலை அறிவாலயத்திற்கு வந்து என்னைச் சந்தித்து, தேர்தலில் எந்த அணுகுமுறையைக் கையாளலாம் என்பதைப் பற்றி கலந்து ஆலோசித்திருக்கிறார்கள்.

வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் ரூபி மனோகரனுக்கு என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்தேன். கடந்த சட்டப்பேரவைத் தேர்தலிலும், தொடர்ந்து நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலிலும், நாங்குனேரி தொகுதியில் எந்த அளவிற்கு சிறப்பான வெற்றியைப் பெற்றிருக்கிறோமோ, அதேபோல், இந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளரான சகோதரர் ரூபி மனோகரனும் உறுதியாக பன்மடங்கு வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்ற நம்பிக்கை எனக்கு மட்டுமல்ல, எல்லோருக்கும் இருக்கிறது.

இந்தத் தேர்தலையொட்டி வருகிற 9, 10 ஆகிய தேதிகளிலும் - அதே போல் தொடர்ந்து 15, 16 ஆகிய தேதிகளிலும் நாங்குனேரி தொகுதியில் நான் பிரசாரம் மேற்கொள்ளப் போவது குறித்து அறிவித்திருக்கிறேன். நாங்குனேரி தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் பணிக்குழு ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. அந்தக் குழுவிற்கு முன்னாள் அமைச்சர் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளர் ஐ.பெரியசாமி, தலைமையில் தங்கை கனிமொழி தேர்தல் பணிக்குழுவின் செயலாளராகவும், மாவட்டச் செயலாளர் ஆவுடையப்பன் செயலளாரகவும் இருந்து தேர்தல் பணிகளை ஆற்றவிருக்கிறார்கள்.

காங்கிரஸ் கட்சியின் சார்பிலும் நாளையோ அல்லது நாளை மறுநாளோ தேர்தல் பணிக்குழு அமைக்கப்படவிருக்கிறது. அந்தக் குழுவோடு இணைந்து - ஒற்றுமையோடு, ஒருமித்த கருத்தோடு வெற்றி என்ற இலக்கை நோக்கி நிச்சயமாக இந்தத் தேர்தல் களத்தில் எங்களுடைய கூட்டணி பாடுபடும் – பணியாற்றும் என்பதை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏற்கனவே நாடாளுமன்றத் தேர்தலில் என்னென்ன வாக்குறுதிகளை வழங்கினோமோ அந்த அடிப்படையிலும், குறிப்பாக இன்றைக்கு தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருக்கும் அ.தி.மு.க.,வின் கரெப்ஷன் – கமிஷன் – கலெக்ஷன் ஆட்சி மற்றும் நாட்டில் நடந்துகொண்டிருக்கும் சர்வாதிகாரம் - சட்டம் ஒழுங்குச் சீர்குலைவு இவைகளையெல்லாம் முன்னிலைப்படுத்தி எங்களுடைய பிரசாரம் அமையவிருக்கிறது. இவ்வாறு அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com