பெண்கள் மேடை ஏறுவதற்கு பாரதியே காரணம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

பெண்கள் மேடை ஏறுவதற்கு முக்கியக் காரணம் தேசியக் கவி பாரதி மட்டுமே என்றார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
பெண்கள் மேடை ஏறுவதற்கு பாரதியே காரணம்: தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்

பெண்கள் மேடை ஏறுவதற்கு முக்கியக் காரணம் தேசியக் கவி பாரதி மட்டுமே என்றார் தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன்.
தூத்துக்குடியில் மாவட்ட பாரதி தமிழ்ச் சங்கம் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற மகாகவி பாரதியாரின் 98-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சியில் அவர் மேலும் பேசியது: 
என்னைப் போன்ற பெண்கள் மேடைகளில் நின்று கொண்டிருக்கிறோம் என்றால் அதற்கு தேசியக் கவி பாரதி மட்டும்தான் காரணம் என எந்த மேடையிலும் கூறுவேன். "வீழ்வேன் என நினைத்தாயோ?' என்ற பாரதியின் பாடல்தான் என்னை இங்கு நிற்க வைத்திருக்கிறது. அச்சம் தவிர் என்பதுதான் பாரதியிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட தெய்வீகமான ஒரு குணம் என்று கூறுவேன்.
"உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதிலும் அச்சமில்லை, அச்சமில்லை' என்ற பாடல் மட்டும் ஒவ்வொரு பெண்ணின் மனதிலும் பதிந்துவிட்டால் எந்தப் பெண்ணையும் துச்சமென நினைக்க முடியாது என்பதை பாரதி அன்றே கூறியுள்ளார். பாரதி தனது மனதில் பெண்களைக் கொண்டாடி உள்ளார்.
பெண்களுக்காக நடத்திய பத்திரிகைக்கு சக்ரவர்த்தினி எனப் பெயர் வைத்து பெண்களைப் பெருமைப்படுத்தியவர் பாரதி. அவரது ஒவ்வொரு வார்த்தையும் நமக்கு பலன் தருவதாக உள்ளது. எந்தவொரு துன்பம் வந்தாலும் காலில் போட்டு நசுக்கிவிட்டு காளியைப் போல மேலெழ முடியும் என பெண்களுக்கு பாரதி கற்றுக் கொடுத்துள்ளார். பாரதி கண்ட கனவு மெய்ப்பட வேண்டும் என்றால், நாட்டு மக்கள் எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்ற எண்ணம்தான் அனைவருக்கும் கனவாக இருக்க வேண்டும். பெண்களுக்கு பாரதியை பற்றி எடுத்துச் சொல்லக்கூடிய பல மேடைகள் அமைக்கப்பட வேண்டும் என்றார் அவர்.
நிகழ்ச்சியில், ஆளுநர் தமிழிசையின் கணவர் செளந்தரராஜன், சொற்பொழிவாளர் வாசுகி மனோகரன், தூத்துக்குடி மாவட்ட பாரதி தமிழ்ச் சங்க நிர்வாகிகள் ஏ. ஜெயராமன், ரமேஷ், ஜெயக்குமார், முத்துக்குமார், ஓய்வு பெற்ற பேராசிரியர் சு. அழகேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழா மேடையில் ஏராளமான மாணவ, மாணவிகள் பாரதியார் வேடமணிந்து காட்சியளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com