திருப்பதி திருக்குடை ஊர்வலம் தொடக்கம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு

திருப்பதி திருக்குடை ஊர்வலம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 
திருமலை - திருப்பதி பிரம்மோற்சவ  விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து தர்மார்த்த சமிதி சார்பில் சனிக்கிழமை தொடங்கிய திருக்குடைகள் ஊர்வலம்.
திருமலை - திருப்பதி பிரம்மோற்சவ  விழாவையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலில் இருந்து தர்மார்த்த சமிதி சார்பில் சனிக்கிழமை தொடங்கிய திருக்குடைகள் ஊர்வலம்.

திருப்பதி திருக்குடை ஊர்வலம் சனிக்கிழமை தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

திருமலை-திருப்பதி பிரம்மோற்சவத்தின்போது, தமிழக பக்தர்களின் சார்பில், ஹிந்து தர்மார்த்த சமிதி, 11 வெண்பட்டுக் குடைகளை ஏழுமலையானுக்கு ஆண்டுதோறும் சமர்ப்பித்து வருகிறது. இந்த ஆண்டுக்கான, திருப்பதி திருக்குடை ஊர்வல தொடக்க விழா சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் சனிக்கிழமை (செப்.28) தொடங்கியது.

நிகழ்வில், விசுவ ஹிந்து வித்யா கேந்திரா பொதுச் செயலாளர் கிரிஜா சேஷாத்ரி வரவேற்றார். விசாகா ஸ்ரீ சாரதா பீடாதிபதி ஸ்ரீஸ்வரூபானந்தேந்ரா சரஸ்வதி மகா சுவாமி மற்றும் விசாகா ஸ்ரீசாரதா பீடம் உத்தர பீடாதிபதி ஸ்ரீ ஸ்வத்மனந்தேந்த்ர சரஸ்வதி சுவாமி ஆகியோர் அருளாசி வழங்கி, திருக்குடை ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர். விசுவ இந்து பரிஷத் தமிழ்நாடு நிறுவனரும், ஹிந்து தர்மார்த்த ஸமிதி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான வேதாந்தம், ஹிந்து தர்மார்த்த ஸமிதி அறங்காவலர் ஆர்.ஆர். கோபால்ஜி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

திருமலை-திருப்பதி தேவஸ்தான உறுப்பினரும் உளுந்துôர்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினர் குமரகுரு, திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழுவின் சிறப்பு அழைப்பாளர் சேகர்ரெட்டி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.

திருக்குடை ஊர்வலம் சென்னை பூக்கடை சென்ன கேசவ பெருமாள் கோயிலில் தொடங்கி, என்எஸ்சி போஸ் சாலை, கோவிந்தப்ப நாயக்கன் தெரு, பைராகி மடம், வால்டாக்ஸ் சாலை வழியாக சென்றது. வழியெங்கும் கோவிந்தா...கோவிந்தா... என பக்தர்கள் கோஷங்களை எழுப்பினர். திருக்குடைகள் மீது பூக்களை, மாலைகளை வீசி பக்தர்கள் தொட்டு வணங்கினர். 

இதைத் தொடர்ந்து வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து, மாலை 5.40 மணிக்கு யானை கவுனியை திருக்குடை ஊர்வலம் கடந்தது. அங்கிருந்து சால்ட் கொட்டகை, செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பாரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னுôர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம், அயனாவரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலில் இரவு தங்கியது. தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காசி விஸ்வநாதர் கோயிலில் இருந்து ஐசிஎப், ஜிகேஎம் காலனி, திரு.வி.க. நகர், பெரம்பூர், வில்லிவாக்கம் சென்றடைந்து இரவு தங்கவுள்ளது.

30-ஆம் தேதி பாடி, முகப்பேர், அம்பத்துôர் எஸ்டேட், அம்பத்துôர், திருமுல்லைவாயல்  சென்றடையும் திருக்குடைகள், அக்டோபர் 1-ஆம் தேதி ஆவடி, பட்டாபிராம், திருநின்றவூர், வீரராகவப் பெருமாள் கோயில், திருவள்ளூர் சென்றடைகின்றன. அக்டோபர் 2-ஆம் தேதி, மணவாள நகர், திருப்பாச்சூர் வழியாக திருச்சானுôருக்கும் சென்றடையும் திருக்குடைகள், அக்டோபர் 3-ஆம் தேதி திருமலையில் மாடவீதி வலம் வந்து வஸ்திரம் மற்றும் மங்களப் பொருள்களுடன் திருப்பதி ஜீயர்கள் முன்னிலையில் திருமலை-
திருப்பதி தேவஸ்தான அதிகாரிகளிடம் முறையாக சமர்ப்பணம் செய்யப்படுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com