பிரதமர் வந்தாலே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான மனநிலை? கொந்தளிக்கும் வேலுமணி 

பிரதமர் வந்தாலே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான மனநிலை? என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

சென்னை: பிரதமர் வந்தாலே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான மனநிலை? என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

தமிழகத்திற்கு பிரதமர் மோடி வரும்போதெல்லாம் சமூக வலைத்தளமான ட்விட்டரில் எனும் Gobackmodi ஹேஷ்டேக் பிரபலமாகிறது. அதிலும் தேசிய அளவில் அது முதலிடத்தைப்பிடிப்பதும் நடக்கும். அந்த அளவுக்கு பிரதமர் மோடி மீதான வெறுப்பு இங்கு நிலவுகிறது.

அதேபோல திங்களன்று சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழா நிகழ்ச்சிக்கு மோடி வந்திருந்த சமயத்திலும், ட்விட்டரில் அந்த Gobackmodi  ஹேஷ்டேக் பிரபலமானது; முத்லிடத்தைப் பிடித்தது.

இந்நிலையில் பிரதமர் வந்தாலே டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்பது எந்த மாதிரியான மனநிலை? என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக திங்களன்று அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:

நாகரீகத்தின் தொட்டிலாக திகழும் தமிழகத்திற்கு பாரத பிரதமர் அவர்கள் வந்தாலே குருட்டுத்தனமாக எதிர்க்க வேண்டும், டிவிட்டரில் ட்ரெண்ட் ஆக்க வேண்டும் என்கிற அநாகரீக அரசியல் என்பது எந்த மாதிரியான மனநிலை, எந்த மாதிரியான பண்பாட்டு நிலைப்பாடு!

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com