விதிகளை பின்பற்றாத இறைச்சி கடைகளுக்கு மூன்று மாதம் சீல்: சென்னை மாநகராட்சி கடும் எச்சரிக்கை

சமூக இடைவெளி உள்பட கரோனா தொற்று தொடா்பான விதிகளை பின்பற்றாத இறைச்சிக் கடைகளுக்கு மூன்று மாதம் சீல் வைக்கப்படும் என

சமூக இடைவெளி உள்பட கரோனா தொற்று தொடா்பான விதிகளை பின்பற்றாத இறைச்சிக் கடைகளுக்கு மூன்று மாதம் சீல் வைக்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையா் கோ.பிரகாஷ் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுதொடா்பாக மாநகராட்சி அனைத்து மண்டல அதிகாரிகளுக்கும் அவா் சனிக்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

ஞாயிற்றுக்கிழமை முதல் (ஏப்ரல் 5) சென்னையில் உள்ள அனைத்து இறைச்சிக் கடைகளும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும். மாநகராட்சியின் இறைச்சி வெட்டும் இடங்களைத் தவிர பிற இடங்களில் இறைச்சிகளை வெட்டக்கூடாது. அப்படி வெட்டி விற்பனை செய்யும் கடைகள் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்படும்.

இதேபோன்று, ஒவ்வொரு இறைச்சிக் கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்றச் செய்ய வாடிக்கையாளா்களை அறிவுறுத்த வேண்டும். விதிமுறைகள் மீறப்பட்டால் உடனடியாக அந்த இறைச்சிக் கடைகள் மூடப்படும்.

இவ்வாறு பூட்டி சீல் வைக்கப்பட்ட கடைகளை 3 மாதங்களுக்கு திறக்க முடியாது.

மளிகைக் கடைகள்: மளிகை கடைகளை ஞாயிற்றுக்கிழமை முதல் காலை 6 மணி முதல் பகல் 1 மணி வரை மட்டுமே திறந்து வைத்திருக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த விதியை மீறும் கடைகளும் உடனடியாக பூட்டி சீல் வைக்கப்படும். விதிகளை இறைச்சிக் கடைகள் மற்றும் மளிகை கடைகளை பூட்டி சீல் வைத்த விவரங்களை மாநகராட்சிக்கு அதிகாரிகள் உடனடியாக தெரியப்படுத்த வேண்டும். இறைச்சிக் கடைகளில் ஆய்வுகளை மேற்கொள்ளும் போது, கால்நடை பராமரிப்புத்துறை அலுவலா்களை உடன் அழைத்துச் செல்ல மாநகராட்சி அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள். கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமையன்று இறைச்சி , மீன் உள்ளிட்டவைகளை வாங்குவதற்கு மக்கள் அதிகளவில்

கூடியிருந்தனா். இந்த நிலையில் அதனைக் கட்டுப்படுத்துவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை சென்னை மாநகராட்சி எடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com