முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிவு

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.
உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் சீறிப்பாய்ந்து வைகை அணையை நோக்கி செல்லும் தண்ணீர்
உத்தமபாளையம் முல்லை பெரியாற்றில் சீறிப்பாய்ந்து வைகை அணையை நோக்கி செல்லும் தண்ணீர்

உத்தம பாளையம்: முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழைப்பொழிவு குறைந்ததால் அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் செய்த சாரல் மழை படிப்படியாக உயர்ந்து கனமழை பெய்தது.

இதன்மூலமாக அணைக்கு நீர் வரத்து அதிகமானதால் ஓரிருநாளில் அணையின் நீர்மட்டம் 112 அடியிலிருந்து மளமளவென உயர்ந்து 136 அடியாக உயர்ந்தது. இதனையடுத்து நீர்வரத்து அதிகம் காரணமாக அணையிலிருந்து வினாடிக்கு 2,160 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

இதன்காரணமாக மழைப்பொழிவு குறைந்த நிலையில் வெளியேற்றப்படும் நீரின் அளவை குறைக்க காரணத்தால் அணை நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்தன.

தற்போது வரை அணையில் இருந்து 1,800 கன அடி நீர் வெளியேற்றப்படுவதால் அணையின் நீர்மட்டம் 128 அடியாக குறைந்துவிட்டது. தேனி மாவட்டத்தில் 14,707 ஏக்கர் பரப்பளவில் முதல் போக சாகுபடி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து 3 மாதத்திற்கு குடிநீர் மற்றும் விவசாயப் பயன்பாட்டிற்கு தண்ணீர் தேவை இருப்பதால் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவை  குறைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com