வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்: நடராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்: நடராஜனுக்கு ஸ்டாலின் வாழ்த்து

​இந்தியக் கிரிக்கெட் அணிக்காக முதன்முறையாக களமிறங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.


இந்தியக் கிரிக்கெட் அணிக்காக முதன்முறையாக களமிறங்கி 2 விக்கெட்டுகளை வீழ்த்திய தமிழக வீரர் நடராஜனுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுட்டுரைப் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளதாவது:

"இந்தியக் கிரிக்கெட் அணிக்காக விளையாடி ஆஸ்திரேலிய மண்ணில் இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி சர்வதேசப் போட்டிகளுக்கான விக்கெட் கணக்கைத் தொடங்கியிருக்கும் தமிழக வீரர் நடராஜனுக்கு வாழ்த்துகள்!

வீசும் பந்துகள் யாவும் சாதனை படைக்கட்டும்!"

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3-வது ஒருநாள் ஆட்டத்தில் தமிழக வீரர் நடராஜன் விளையாடும் லெவனில் சேர்க்கப்பட்டார். அறிமுக ஆட்டத்திலேயே அசத்திய அவர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

இந்த ஆட்டத்தில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com