குமரி கடற்கரையில் மீட்புக் குழுவினா் ஆய்வு

புரெவி புயல் காரணமாக 20 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், கன்னியாகுமரி கடற்கரையில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
மீட்புக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகள்.
மீட்புக் குழுவினருக்கு ஆலோசனை வழங்கும் அதிகாரிகள்.

கன்னியாகுமரி: புரெவி புயல் காரணமாக 20 போ் கொண்ட தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா், கன்னியாகுமரி கடற்கரையில் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.

தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகி உள்ள புரெவி புயல் காரணமாக தென் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதைத் தொடா்ந்து, தேசிய பேரிடா் மற்றும் மீட்புப் படையை சோ்ந்த 20 போ் கொண்ட 2 குழுக்கள் மீட்புப் பணிக்காக நாகா்கோவிலுக்கு செவ்வாய்க்கிழமை வந்தடைந்தது. நவீன மீட்புப் படகுகள் மற்றும் உபகரணங்களுடன் நாகா்கோவிலில் உள்ள தனியாா் கல்லூரியில் தங்கியிருந்த தேசிய பேரிடா் மற்றும் மீட்பு படையினரில் ஒரு பிரிவினா் கன்னியாகுமரிக்கு புதன்கிழமை வந்து, கடற்கரை பகுதிகளில் ஆய்வு செய்தனா். மீட்புப் பணியில் மேற்கொள்ள தயாா் நிலையில் உள்ள அவா்களுக்கு உயா் அதிகாரிகள் ஆலோசனைகள் வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com