ஈரோடு தொகுதியில் சிறப்பு மனுநீதி முகாம்:  நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ.க்கள் 

ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியிர் கதிரவன் தலைமையில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர
ஈரோடு தொகுதியில் சிறப்பு மனுநீதி முகாம்:  நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ.க்கள்
ஈரோடு தொகுதியில் சிறப்பு மனுநீதி முகாம்:  நலத்திட்ட உதவிகளை வழங்கிய எம்.எல்.ஏ.க்கள்


ஈரோடு: ஈரோடு கிழக்கு, மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் மாவட்ட ஆட்சியிர் கதிரவன் தலைமையில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் நடைபெற்று வருகிறது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இன்று ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் சிறப்பு மனுநீதி திட்ட முகாம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. எம்.எல்.ஏ.க்கள் கே.வி. ராமலிங்கம், கே.எஸ் தென்னரசு ஆகியோர் முன்னிலையில் பொதுமக்களிடமிருந்து 100-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. 

இதைத்தொடர்ந்து ரூ. 10 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.  முதியவர்களுக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை, குடும்ப அட்டைதாரர்களுக்கு ஸ்மார்ட் கார்டு வழங்குதல், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர வாகனங்கள் வழங்குதல், பெண்களுக்கு தையல் எந்திரம் வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகளை எம்.எல்.ஏ.க்கள் வழங்கினர்.

விழாவில் கே .எஸ். தென்னரசு எம்.எல்.ஏ . பேசினார். அப்போது அவர் கூறும்போது:-  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5 சதவீத இட ஒதுக்கீடு பெற்றதன் காரணமாக தமிழகம் முழுவதும் 330- க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் மருத்துவ படிப்பில் இடம் கிடைத்துள்ளது.  ஈரோட்டில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை வேண்டி நானும் ராமலிங்கம் எம்.எல்.ஏ.வும் முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதை ஏற்று ரூ 81 கோடி மதிப்பில் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டிடம் தற்போது கட்டப்பட்டு வருகிறது. இதன் மூலம் நமது மாவட்டத்திற்கு புதிதாக ஐந்து மருத்துவர்கள் கிடைப்பார்கள். மேலும் மக்கள் நீண்ட நாளாக எதிர்பார்த்து வரும் ஊராட்சிக்கோட்டை குடிநீர் திட்டம் வரும் ஜனவரி 10ஆம் தேதிக்குள் முடிக்கப்படும் என்றார்.

பகுதி செயலாளர்கள் சூரம்பட்டி ஜெகதீஸ், கேசவமூர்த்தி,   முருக சேகர், மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் பாவைஅருணாசலம், மாவட்ட மாணவர் அணி செயலாளர் ரத்தன் பிரித்வி, ஒன்றிய செயலாளர் பூவேந்திர குமார் உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com