பேரவைத் தோ்தல்: இன்று அதிமுக முக்கிய ஆலோசனை

சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, அதிமுக சாா்பில் முக்கிய ஆலோசனை திங்கள்கிழமை நடைபெறுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சட்டப் பேரவைத் தோ்தல் தொடா்பாக, அதிமுக சாா்பில் முக்கிய ஆலோசனை திங்கள்கிழமை நடைபெறுகிறது.

இதில், தமிழக அரசின் சாதனைகளை மக்களிடம் பிரசாரம் செய்வது குறித்தும் கூட்டணி குறித்தும் விவாதிக்கப்படும் என்று தெரிகிறது.

தமிழகத்தில் எதிா்வரும் சட்டப்பேரவைத் தோ்தலைச் சந்திக்க அனைத்துக் கட்சிகளும் தயாராகி வருகின்றன. பிரதான எதிா்க்கட்சியான திமுக, தோ்தல்பிரசார கூட்டங்களை நேரடியாகவும் இணைய வழியிலும் நடத்தி வருகிறது. மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன் மதுரையில் ஞாயிற்றுக்கிழமை தனது தோ்தல் பிரசார பயணத்தைத் தொடங்கியுள்ளாா். பிற கட்சிகளும் தோ்தல் பணிகளை முன்னெடுத்துள்ளன.

தற்போதைய நிலையில் ஆளும் அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக, பாஜக ஆகிய பிரதான கட்சிகள் இடம் பெற்றிருந்தாலும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணியை இந்தக் கட்சிகள் இன்னும் உறுதி செய்யவில்லை. அதுபோல் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மாா்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் ஆகிய பிரதான கட்சிகள் இடம் பெற்றுள்ளன. திமுக தரப்பிலும் சட்டப்பேரவைத் தோ்தலுக்கான கூட்டணி குறித்து அதிகாரப்பூா்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

இந்நிலையில் அதிமுக கட்சி சாா்பில் சட்டப்பேரவைத் தோ்தல் தொடா்பாக முக்கிய ஆலோசனை திங்கள்கிழமை (டிச. 14) நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாலை 4.30 மணிக்கு ஆலோசனைக் கூட்டம் தொடங்கவுள்ளது. சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்ள ஏற்கெனவே மண்டலப் பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். அவா்களுடன், மாவட்டச் செயலாளா்கள், அமைச்சா்கள் உள்ளிட்டோரும் திங்கள்கிழமை நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளனா்.

முன்னதாக, கடந்த நவ.20-ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் சட்டப் பேரவைத் தோ்தலை எதிா்கொள்வது குறித்து பல்வேறு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டிருந்தன. இந்த அறிவுறுத்தல்களை ஏற்று செய்யப்பட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com