சி.ஐ.எஸ்.எஃப். தேர்விலும் முறைகேடு: பாதுகாப்புப்படை வீரர் பணியிடை நீக்கம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வீரர் தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது
சி.ஐ.எஸ்.எஃப். தேர்விலும் முறைகேடு: பாதுகாப்புப்படை வீரர் பணியிடை நீக்கம்

டி.என்.பி.எஸ்.சி தேர்வு முறைகேட்டைத் தொடர்ந்து சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப்படை தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4, குரூப் 2 உள்ளிட்ட தேர்வுகளில் முறைகேடு நடந்துள்ளது மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டிஎன்பிஎஸ்சி தேர்வு முறைகேடு குறித்து சிபிசிஐடி போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில், சி.ஐ.எஸ்.எஃப் எனப்படும் மத்திய தொழிலக பாதுகாப்புப் படை தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது தெரிய வந்துள்ளது. நெல்லை மாவட்டம் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியாற்றி வந்த பாதுகாப்புப் படை வீரர் பிரிகு பாருயா. அசாமைச் சேர்ந்த இவர், கடந்த 2017ம் ஆண்டு சி.ஐ.எஸ்.எஃப் தேர்வில் தேர்ச்சி பெற்று மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் பணியில் சேர்ந்துள்ளார்.

பின்னர் பயிற்சியின்போது நடந்த அடுத்தடுத்த தேர்வுகளில் குறைவான மதிப்பெண்கள் பெற்றுள்ளார். இதனால் அவரது எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள், பயிற்சியின்போது எழுதிய விடைத்தாள்கள் இரண்டையும் அதிகாரிகள் ஒப்பிட்டு பார்த்தனர். இரண்டிலும் எழுத்து வித்தியாசம் இருந்ததால் பிரிகு பாருயாவிடம் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் எழுத்துத் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதையடுத்து அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த் முறைகேட்டில் வேறு யாரெல்லாம் ஈடுபட்டனர்? இதேபோன்று வேறு யாரும் முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com