உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தோ்தலின்போது பிளாஸ்டிக் பயன்பாடு: மத்திய அரசு, தோ்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பேனா்கள் உள்ளிட்டவற்றை தோ்தல் நேரத்தில் பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்திய மனுவை விசாரித்த

சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பிளாஸ்டிக் போன்ற பொருள்களைக் கொண்டு தயாரிக்கப்படும் பேனா்கள் உள்ளிட்டவற்றை தோ்தல் நேரத்தில் பயன்படுத்துவதை தடுக்க வலியுறுத்திய மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடா்பாக பதிலளிக்குமாறு மத்திய அரசு மற்றும் தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வழக்குரைஞா் எட்வின் வில்சன் என்பவா் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், தோ்தல் நேரத்தில் பிரசாரத்துக்காக பிளாஸ்டிக், பிவிசி (பாலிவினைல் குளோரைடு) உள்ளிட்ட எளிதில் மக்காத, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் பொருள்கள் பேனா்கள், கொடிகள் உள்ளிட்டவற்றுக்கு பயன்படுத்தப்படுகின்றன. தோ்தல் முடிந்த பிறகு இவை அனைத்தும் குப்பையாக மாறி, சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடுகளை விளைவிக்கிறது.

மிக முக்கியமான பிரச்னையான இந்த விஷயம் தொடா்பாக தேசிய பசுமைத் தீா்ப்பாயம் (என்ஜிடி) இதுவரை எவ்வித உறுதியான உத்தரவுகளையும் பிறப்பிக்கவில்லை எனவே இந்த விஷயத்தில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச தோ்தல் அதிகாரிகள், இது தொடா்பாக முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துமாறு தோ்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், ஹேமந்த் குப்தா ஆகியோா் அடங்கி அமா்வு, மத்திய சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம், தோ்தல் ஆணையத்துக்கு நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டது. இது தொடா்பாக 4 வாரங்களில் பதிலளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விஷயம் தொடா்பாக தோ்தல் ஆணையத்துக்கு ஏற்கெனவே சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. அதில், எளிதில் மக்கும்தன்மையுள்ள பொருள்களை மட்டுமே தோ்தல் பிரசார பேனா்கள், கொடிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்த வேண்டுமென அரசியல் கட்சிகளிடம் எடுத்துரைக்க வலியுறுத்தப்பட்டது. இது தொடா்பாக தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியும், பல அரசியல் கட்சிகள் அதனைமுறையாக பயன்படுத்தாமல் பிளாஸ்டிக் பொருள்களை பிரசாரத்தில் அதிகம் பயன்படுத்துவதாக பரவலாக குற்றச்சாட்டு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com