பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம்: மு.க.ஸ்டாலின்

சி.ஏ.ஏ., என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கைகெயழுத்து இயக்கம் நடக்க உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கையெழுத்து இயக்கம்: மு.க.ஸ்டாலின்

சி.ஏ.ஏ., என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக பிப்ரவரி 2ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை கைகெயழுத்து இயக்கம் நடக்க உள்ளது என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் சென்னைஅண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது.

இதில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உள்பட பல்வேறு கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.

கூட்டத்தில் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எந்த வகையில் எதிர்ப்பு தெரிவித்துப் போராட்டம் நடத்தலாம் என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், சி.ஏ.ஏ., என்ஆர்சி, என்.பி.ஆர்.,க்கு எதிராக கைகெயழுத்து இயக்கம் நடக்க உள்ளது.

பொதுமக்களிடமிருந்து பெறப்படும் கையெழுத்து பிரதிகளை குடியரசுத் தலைவருக்கு அனுப்ப உள்ளோம். நேரம் கிடைத்தால் குடியரசுத் தலைவரை நேரில் சந்தித்து கோரிக்கைகள் பற்றி வலியுறுத்துவோம். பெரியார் சிலையை சேதப்படுத்தியது கண்டிக்கத்தக்கது. சேதப்படுத்தியவர்கள் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com