நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்.1 முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்.1 முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்படுகிறது.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்.1 முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்

நெல்லை தூத்துக்குடி மாவட்டங்களில் பிப்.1 முதல் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டை திட்டம் அமல்படுத்தப்படும் என்று உணவு மற்றும் குடிமைப் பொருள் வழங்கல் ஆணையர் சஜ்ஜன் சிங் சவான் மற்றும் நெல்லை மாவட்ட ஆட்சியர் கூட்டாக புதன்கிழமை பேட்டியளித்தனர். அதில் பேசியதாவது,

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஒரே நாடு ஒரே குடும்ப அட்டைத் திட்டம் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் அனைத்து கடைகளிலும் சோதனை முயற்சியாக அமல்படுத்தப்படுகிறது.

நெல்லை மாவட்டத்தில் 4,78,206 குடும்ப அட்டைகளும், 789 கடைகளும் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் 4,93,842 குடும்ப அட்டைகளும், 957 கடைகளும் உள்ளன. இரண்டு மாவட்டங்களிலும் கூடுதலாக 5 சதவீத பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் 100 சதவீத கடைகளும், மாஞ்சோலை மலைப்பகுதியில் உள்ள 6 கடைகளை தவிர்த்து மற்ற கடைகளிலும் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

ஒரே வருவாய் கிராமத்தில் உள்ள குடும்ப அட்டையைப் பயன்படுத்தி அதே கிராமத்தில் உள்ள இதர கடைகளில் பொருள்கள் வாங்க இயலாது. 

ரேஷன் கடைகளில் மண்ணெண்ணெய் தவிர்த்து அனைத்து பொருள்களும் தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதை தினமும் மாவட்ட அளவிலான அதிகாரிகள் உறுதி செய்வார்கள்.

ஆன்லைன் முறையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால், அதில் உள்ள நெட்வொர்க் உள்ளிட்ட கணினி பிரச்னைகளை சரிசெய்ய தாலுகா வாரியாக பொறியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com