காலிங்கராயன் வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு

காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 
காலிங்கராயன் வாய்க்காலில் இன்று தண்ணீர் திறப்பு

காலிங்கராயன் வாய்க்கால் மூலம் பாசனம் பெறும் நிலங்களின் முதல் போக நன்செய் பாசனத்திற்கு புதன்கிழமை தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகளின் வேண்டுகோளை ஏற்று தண்ணீர் திறப்பு உத்தரவை தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு காலிங்கராயன் அனைக் கட்டிலிருந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ் தென்னரசு மொடக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணியம் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா ஆகியோர் காலிங்கராயன் வாய்க்காலில் தண்ணீர் திறந்து வைத்தனர்.

இதையடுத்து பவானிசாகர் அணையிலிருந்து பாசனம் பெறும் 15,743 ஏக்கர் நிலங்களுக்கு ஜூலை 1 முதல் அக்டோபர் 28ம் தேதி வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ஈரோடு மொடக்குறிச்சி கொடுமுடி ஆகிய வட்டங்களில் உள்ள விவசாயிகள் பயன் பெறுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நல்ல விளைச்சலை பெற வேண்டுமாய் சட்டமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தனர். உடன் முன்னாள் மாநகராட்சி துணை மேயர் கே சி பழனிச்சாமி, மொடக்குறிச்சி ஒன்றிய சேர்மன் கணபதி விவசாய சங்க தலைவர்கள் தெய்வசிகாமணி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com