வெள்ளக்கோவிலில் ரூ.78 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை 

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.78 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.
தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யும் விவசாயிகள்
தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யும் விவசாயிகள்

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வியாழக்கிழமை ரூ.78 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு விற்பனை நடைபெற்றது.

இந்த வார ஏலத்துக்கு லாலாப்பேட்டை, கரூா், தாராபுரம், சின்ன தாராபுரம், முத்தூர், புதுப்பை, உப்புப்பாளையம் உள்ளிட்ட ஊர்களில் இருந்து 231 விவசாயிகள் தங்களுடைய 1,856 மூட்டைகள் தேங்காய் பருப்புகளை விற்பனை செய்யக் கொண்டு வந்திருந்தனர்.

மொத்த எடை 91,150 கிலோவாகும். தாராபுரம், வெள்ளக்கோவில், காங்கயம், முத்தூர், நஞ்சை ஊத்துக்குளியைச் சேர்ந்த 24 வணிகர்கள் இவற்றை வாங்குவதற்காக வந்திருந்தனர்.

விலை கிலோ ரூ.71.70 முதல் ரூ.102.05 வரை விற்பனையானது. மாதிரி விலை கிலோ ரூ.101.60. விற்பனைக் கூடக் கண்காணிப்பாளர் ரா.மாரியப்பன் முன்னிலையில் ஒட்டு மொத்த விற்பனைத் தொகை ரூ.78 லட்சத்து 15 ஆயிரத்து 848 அந்தந்த விவசாயிகளுக்குப் பட்டுவாடா செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com