பிநாமி பெயரில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை கையகப்படுத்த வேண்டும்: சு. திருநாவுக்கரசர்

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும், காந்தி பூங்காவிலும் 610
பிநாமி பெயரில் உள்ள ஜெயலலிதாவின் சொத்துகளை கையகப்படுத்த வேண்டும்: சு. திருநாவுக்கரசர்

புதுக்கோட்டையில் திங்கள்கிழமை காலை காங்கிரஸ் கட்சி அலுவலகத்திலும், காந்தி பூங்காவிலும் 610 ஏழை எளிய மக்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு அரிசி, பருப்பு ஆகிய நிவாரண உதவிகளை திங்கள்கிழமை வழங்கினார். 

பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியது:

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா திரைப்படத்தில் நடிக்கும்போது சேகரித்த சொத்துகளை அவர்களின் உறவினர்களுக்கும், முதல்வரான பிறகு வாங்கிய சொத்துகளை நினைவு இல்லம் போன்ற பொதுப் பயன்பாட்டுக்கும் வழங்குவதுதான் சரியாக இருக்கும். அத்துடன் ஜெயலலிதா பிநாமி பெயர்களில் வாங்கிய சொத்துகளை ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான தனி ஆணையம் அமைத்து கண்டறிந்து கையகப்படுத்த வேண்டும்.

திமுக நிர்வாகிகள் ஆர்.எஸ். பாரதி, தயாநிதி மாறன் ஆகியோர் வாய்தவறிப் பேசியதாகக் கூறி வருத்தம் தெரிவித்த பின்னரும் ஆளும் அதிமுகவினரே போராட்டம் நடத்துவது வினோதமான ஒன்று' என்றார் திருநாவுக்கரசர்.

நிகழ்ச்சிகளில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர் பெரியண்ணன் அரசு, காங்கிரஸ் தலைவர்கள் வழக்குரைஞர் சந்திரசேகரன்,  முருகேசன் (வடக்கு), இப்ராஹிம் பாபு (நகரம்), முன்னாள் நகர்மன்றத் தலைவர் துரை திவ்யநாதன், திமுக நகரச் செயலர் க. நைனா முகமது உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com