உணவக செயல்பாடு: வழிகாட்டு முறை வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. 
உணவக செயல்பாடு: வழிகாட்டு முறை வெளியீடு

தமிழகத்தில் ஜூன் 8 முதல் உணவகங்கள் திறக்கவுள்ள நிலையில் தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.
அதில்,
• உணவகங்களுக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு கண்டிப்பாக உடல் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்.
* உணவங்களில் 50% இருக்கைகளில் மட்டுமே வாடிக்கையாளர் அமர்ந்து உண்ண அனுமதி.
• உணவகங்களில் சாப்பிடும் டேபிள்களுக்கு இடையே 1 மீட்டர் இடைவெளி இருக்க வேண்டும்
* உணவகங்களில் ஏசி பயன்படுத்தக் கூடாது; ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்டமாக இருக்க வேண்டும்.
* உணவங்களில் உள்ள கழிவறைகளை நாள்தோறும் 5முறை கிருமி நாசினியால் சுத்தப்படுத்த வேண்டும்.
• ஊழியர்கள் அனைவரும் முககவசம், கையுறை கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்
*கரோனா தொற்று அறிகுறி, உடல்நல பாதிப்பு உள்ள வாடிக்கையாளர்கள் உணவகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.
* கை கழுவும் இடத்தில் கிருமி நாசினி, சோப்பு இருக்க வேண்டும் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.  
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com