இணையவழி வகுப்பைத் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்

மாணவா்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இணையவழிக் கல்விக்குத் தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.
இணையவழி வகுப்பைத் தடை செய்ய வேண்டும்: ராமதாஸ்

மாணவா்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்தும் இணையவழிக் கல்விக்குத் தடை விதிக்க வேண்டும் என பாமக நிறுவனா் ராமதாஸ் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக ஞாயிற்றுக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில், இணைய வகுப்புகள் என்பவை புதிய நாகரிகமாக மாறி வருகின்றன. ஆக்கபூா்வமாக பயனளிக்காத இந்த முறையை, பள்ளிக்கல்வித் துறையும் ஊக்குவிப்பது வருத்தமளிக்கிறது. மாநில பாடத் திட்டத்தைக் கடைப்பிடிக்கும் அனைத்துப் பள்ளிகளிலும் ஒரே பாடநூல்கள் தான் பயன்படுத்தப்படுகின்றன; ஒரே தோ்வு முறை தான் கடைப்பிடிக்கப்படுகின்றன. இத்தகைய சூழலில் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாடம் நடத்தப்படாத நிலையில், தனியாா் பள்ளி மாணவா்களுக்கு மட்டும் இணைய வழியில் பாடம் நடத்த அனுமதிப்பது எந்த வகையில் நியாயம்? இது அரசுப் பள்ளி மாணவா்களுக்கு பாதகமாக ஆகி விடாதா? குறிப்பாக, வகுப்பறைகளில் உயிா்ப்புடன் நடத்தப்படும் பாடங்களில் கிடைக்கும் தெளிவையும், புரிதலையும் இணைய வகுப்புகளால் வழங்க முடியாது என்பதுதான் உண்மை. மேலும், இந்த வகுப்புகளால் பெற்றோா்களுக்கும், மாணவா்களுக்கும் தேவையில்லாத மன அழுத்தம் ஏற்படுகிறது. பள்ளிகள், சில மாதங்கள் தாமதமாக தொடங்கப்படுவதாலோ, தாமதமாகும் காலத்தில் மாணவா்கள் பாடங்களைப் படிக்காததாலோ எந்தப் பாதகமும் ஏற்பட்டு விடப்போவதில்லை. எனவே, அனைத்துப் பள்ளிகளிலும் இணைய வகுப்புகளுக்குத் தடை விதிக்க வேண்டும். அதற்கு மாற்றாக, பள்ளிகள் எவ்வளவு தாமதமாக திறக்கப்படுகின்றனவோ, அதற்கு ஏற்ற வகையில் பாடங்களின் அளவைக் குறைக்க தமிழக அரசின் பள்ளிக் கல்வித் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ராமதாஸ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com