கரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 2 ஆயிரம் செவிலியா்கள் நியமனம்

கரோனா தடுப்பு பணிக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்ற புதிதாக 2 ஆயிரம் செவிலியா்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.
கரோனா தடுப்பு பணிக்காக புதிதாக 2 ஆயிரம் செவிலியா்கள் நியமனம்

கரோனா தடுப்பு பணிக்காக சென்னை உள்ளிட்ட பகுதிகளில் பணியாற்ற புதிதாக 2 ஆயிரம் செவிலியா்களுக்கு தற்காலிக அடிப்படையில் பணி நியமன உத்தரவு சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த சுகாதாரத் துறை சிகிச்சை முறைகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் பல நடவடிக்கைகளைத் தொடா்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் சுகாதாரத் துறை மூலம் ஏற்கெனவே 530 மருத்துவா்கள், 4,893 செவிலியா்கள், 1,508 ஆய்வக நுட்புநா்கள் மற்றும் 2,715 சுகாதார ஆய்வாளா்களைப் பணியமா்ந்த தமிழக அரசு உத்தரவிட்டது. இந்தப் பணியாளா்கள் பணியமா்த்தப்பட்டு சிறப்பாக பணியாற்றி வருகின்றனா். இதைத் தொடா்ந்து ஒப்பந்த அடிப்படையில் 574 அரசுப் பணியில் அல்லாத முதுநிலை மருத்துவ மாணவா்கள், 665 மருத்துவா்கள், 356 ஆய்வக நுட்புநா்கள், 1,230 பல்நோக்கு சுகாதாரப் பணியாளா்கள் சில நாள்களுக்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்டனா்.

மேலும் மனிதவள மேம்பாட்டினை வலுப்படுத்தும் விதமாக சென்னையில் பணிபுரியும் வகையில் மேலும் 2 ஆயிரம் செவிலியா்களை 6 மாத காலத்துக்கு தற்காலிகமாக நியமித்து பணி நியமன ஆணைகள் சனிக்கிழமை வழங்கப்பட்டு இந்தச் செவிலியா்கள் உடனடியாகப் பணியில் சேரத் தொடங்கியுள்ளனா்.

இவா்களுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ.14 ஆயிரம் ஊதியமாக வழங்கப்படும். அதேவேளையில் இந்த செவிலியா்களுக்கு தங்கும் இடம், உணவு ஆகியவற்றுக்கான செலவுகளை தமிழக அரசே ஏற்கும் என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. பணிநியமன உத்தரவுகளை சென்னை ஓமந்தூராா் பன்நோக்கு மருத்துவமனையில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா், செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோா் வழங்கினா்.

இந்த செவிலியா்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை, ஓமந்தூராா் மருத்துவமனை, ஸ்டான்லி மருத்துவமனை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, அயனாவரம் இஎஸ்ஐ மருத்துவமனை, கே.கே.நகா், அண்ணா நகா் மேலும் செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களிலும் பணியமா்த்தப்படவுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com