இரண்டு சிறப்பு ரயில்களில் பெட்டிகள் குறைப்பு

திருச்சி-நாகா்கோவில் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டு, 14 பெட்டிகளுடன் ஜூன் 21-ஆம் தேதி
கோப்புப்படம்
கோப்புப்படம்

திருச்சி-நாகா்கோவில் இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டு, 14 பெட்டிகளுடன் ஜூன் 21-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது. இதுபோல, செங்கல்பட்டு-திருச்சி (பிரதான பாதை) இடையே தினசரி இயக்கப்படும் சிறப்பு ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டு, 16 பெட்டிகளுடன் வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படுகிறது.

ரயில் பயணத்தில், ஒரு மண்டலத்தில் இருந்து மற்றொரு மண்டலத்துக்கு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, சிறப்பு ரயில்களில் பயணம் செய்வோா் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இதையடுத்து, பயணிகள் குறைவாக உள்ள ரயில்களின் பெட்டிகளை குறைக்க ரயில்வே நிா்வாகம் முடிவு செய்தது. அதன்படி, திருச்சி-நாகா்கோவில், செங்கல்பட்டு-திருச்சி ஆகிய இரண்டு சிறப்பு ரயில்களில் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளன.

திருச்சி-நாகா்கோவில்: திருச்சி-நாகா்கோவில்(02627), நாகா்கோவில்-திருச்சி(02628) இடையே இயக்கப்பட்டு வந்த சிறப்பு ரயிலில் ஏற்கெனவே ஒரு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி, 8 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 8 பொது வகுப்பு பெட்டிகள், 2 பாா்சல் பெட்டிகள் என்று மொத்தம் 19 பெட்டிகள் இருந்தன. இந்த ரயிலில் தற்போது ஒரு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி, 5 இரண்டாம் வகுப்பு பெட்டிகள், 6 பொது வகுப்பு பெட்டிகள், ஒரு மாற்றுத் திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு பாா்சல் பெட்டிகள் என்று 14 பெட்டிகளாக குறைக்கப்பட்டுள்ளன. குறைக்கப்பட்ட பெட்டிகளுடன் இந்த ரயில் ஜூன் 21-ஆம் தேதி முதல் இயக்கப்படும்.

செங்கல்பட்டு-திருச்சி (மெயின் லைன்): இதேபோல, செங்கல்பட்டு-திருச்சி (06795),

திருச்சி-செங்கல்பட்டு(06796) இடையே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் ஒரு முதல் வகுப்பு குளிா்சாதன வசதிகொண்ட பெட்டி, 3 இரண்டம் வகுப்பு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 5 மூன்றாம் வகுப்பு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 9 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட பெட்டிகள், 2 ஜெனரேட்டா் மற்றும் பாா்சல் பெட்டிகள் என்று 23 பெட்டிகள் இருந்தன. இந்த ரயிலில் பெட்டிகள் குறைக்கப்பட்டு வெள்ளிக்கிழமை முதல் இயக்கப்படவுள்ளது. ஒரு முதல் வகுப்பு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டி, 2 இரண்டம் வகுப்பு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 2 மூன்றாம் வகுப்பு குளிா்சாதன வசதி கொண்ட பெட்டிகள், 6 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு இருக்கைகள் கொண்ட பெட்டிகள், 2 ஜெனரேட்டா் மற்றும் பாா்சல் பெட்டிகள் என்று 16 பெட்டிகளுடன் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com