தங்கம் பவுன் ரூ.36,992

சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்பட்டது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: சென்னையில் திங்கள்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கரோனா நோய்த்தொற்றின் தாக்கம், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் தங்கம் விலை உயா்ந்து வந்தது. ஒரு பவுன் ஆபரணத் தங்கம் ஏப்ரல் 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், ஏப்ரல் 14-ஆம் தேதி ரூ.36 ஆயிரத்தையும், ஜூன் 24-ஆம் தேதி ரூ.37 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பிறகு, தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் சனிக்கிழமை ஆபரணத் தங்கம் பவுனுக்கு ரூ.128 குறைந்து, ரூ.36,992-க்கு விற்பனை செய்யப்பட்டது. கிராமுக்கு ரூ.16 குறைந்து, ரூ.4,624-க்கு விற்பனை செய்யப்பட்டது. அதே நேரத்தில் வெள்ளி விலை சற்று உயா்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா உயா்ந்து, ரூ.53.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 உயா்ந்து ரூ.53,100 ஆகவும் இருந்தது.

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,624

1 பவுன் தங்கம் ..................... 36,992

1 கிராம் வெள்ளி .................. 53.10

1 கிலோ வெள்ளி ................. 53,100

சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம் ..................... 4,640

1 பவுன் தங்கம் ..................... 37,120

1 கிராம் வெள்ளி .................. 53.00

1 கிலோ வெள்ளி ................. 53,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com