வயலில் இறங்கி நாற்று நட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி நடவு நட்டார். 
வயலில் இறங்கி நாற்று நட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி

திருவாரூர் மாவட்டத்தில் விவசாயிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வயலில் இறங்கி நடவு நட்டார். 

காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு திருவாரூரில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது. முன்னதாக இதில் கலந்துகொள்வதற்காக திருச்சியிலிருந்து சனிக்கிழமை காலை காா் மூலம் நீடாமங்கலம் வந்தாா். 

அவருக்கு அமைச்சா் ஆா்.காமராஜ் தலைமையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து திருவாரூர் மாவட்ட எல்லையான கோவில் வெண்ணியில் இருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி திறந்த வாகனத்தில் நின்றுகொண்டு சாலையின் இருமங்கிலும் காத்திருந்த பொதுமக்களை பார்த்து கையசைத்தவாறு சென்றார்.

அப்போது சித்தமல்லி என்ற இடத்தில் விவசாயிகள் நாற்று நடுவதை பார்த்த முதல்வர் வாகனத்தில் இருந்து இறங்கி விவசாயிகளிடம் உரையாடினார். தொடர்ந்து விவசாயிகளோடு சேர்ந்து வயலில் நாற்று நட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com