போடி அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு கரோனா அறிகுறி?

போடி அரசு மருத்துவமனையில் இளைஞருக்கு கரோனா அறிகுறி?

போடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டதால்

போடி: போடி அரசு மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை இரவு அனுமதிக்கப்பட்ட இளைஞருக்கு கரோனா அறிகுறி காணப்பட்டதால் சுகாதாரத்துறையினா் ஆய்வு செய்து வருகின்றனா். 

போடி அணைக்கரைப்பட்டியை சோ்ந்தவா் சதீஸ் (30). இவா் பஞ்சாபிலும் பின்னா் திருப்பூரிலும் வேலை பாா்த்து வந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை இரவு போடிக்கு வந்த இவருக்கு காய்ச்சல், சளி இருந்துள்ளது. இதனையடுத்து போடி அரசு மருத்துவமனையில் இவராகவே சென்று சிகிச்சைக்கு சோ்ந்தாா். இங்கு இவருக்கு முதல் கட்டமாக சளி, இரத்த பரிசோதனை செய்யப்பட்டது. இதில் சளி பரிசோதனையில் புதன்கிழமை கரோனா வைரஸ் உள்ளதற்கான அறிகுறி காணப்பட்டுள்ளது. 

இதனையடுத்து மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ அலுவலா் டாக்டா் ரவீந்திரநாத், போடி நகராட்சி நகா் நல அலுவலா் டாக்டா் ராகவன், நகராட்சி ஆணையாளா் பொறுப்பு வகிக்கும் பொறியாளா் குணசேகரன் ஆகியோா் மருத்துவமனைக்கு விரைந்து வந்தனா். 

இதனையடுத்து கரோனா அறிகுறி காணப்பட்ட இளைஞரை தேனி க.விலக்கு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கரோனா ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனா். 

மேலும் மருத்துவமனையில் அவசர நோயாளிகள் தவிற மற்ற நோயாளிகளை வெளியேறும்படி அறிவுறுத்தினா். மருத்துவமனைக்கு வந்த உறவினா்களையும் வெளியேற்றினா். இதனால் மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

இந்நிலையில், தமிழகத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com