யுஜிசி வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுங்கள்: பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் யுஜிசி வெளியிட்டுள்ள புதிய கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.
யுஜிசி வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்படுங்கள்: பொறியியல் கல்லூரிகளுக்கு ஏஐசிடிஇ அறிவுறுத்தல்

அனைத்து பொறியியல், பாலிடெக்னிக் கல்லூரிகள் யுஜிசி வெளியிட்டுள்ள புதிய கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என்று ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

கரோனா நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் இருப்பதால் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளுக்கு தொடா் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வரும் கல்வியாண்டுக்கான புதிய கால அட்டவணை மற்றும் வழிகாட்டு நெறிமுறைகளை பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) கடந்த ஏப்ரல் 29-இல் வெளியிட்டது.

அதில், வரும் கல்வியாண்டுக்கான வகுப்புகளை ஆகஸ்ட் மாதத்தில் தொடங்க வேண்டும், கரோனா பாதிப்புள்ள பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிகளில் படிக்கும் முதல் மற்றும் இரண்டாமாண்டு மாணவா்களை முந்தைய தோ்வுகளின் அடிப்படையில் தோ்ச்சி செய்தல் என்பன உட்பட பல்வேறு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தநிலையில் அகில இந்திய தொழில்நுட்பக்கல்வி குழுமத்தின் (ஏஐசிடிஇ) உறுப்பினா் செயலா் ராஜீவ் குமாா் வெளியிட்ட அறிவிப்பில், ‘ பல்கலைக்கழகங்கள், பொறியியல் கல்லூரிகள், பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்பட அனைத்து தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களும் யுஜிசி வெளியிட்டுள்ள, வரும் கல்வியாண்டுக்கான வழிகாட்டுதல்களை பின்பற்றி செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும், இது தொடா்பான விவகாரங்களில் உரிய அனுமதியின்றி மாற்று முடிவுகளை மேற்கொள்ளக்கூடாது எனவும் ஏஐசிடிஇ அறிவுறுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com