திருமழிசை தற்காலிக காய்கறி சந்தையை ஆய்வு செய்யும் முதல்வர், துணை முதல்வர் 

திருமழிசையில் அமையவிருக்கும் காய்மறி சந்தையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை ஆய்வு செய்ய உள்ளனர்.

சென்னை கோயம்பேடு சந்தையில் கரோனா தொற்று அதிகரித்ததால் பொதுமக்களின் பாதுகாப்பு கருதி திருமழிசைக்கு மாற்றப்படுவதாக சந்தையின் நிா்வாகக் குழு கடந்த வாரம் அறிவித்தது. இதைத் தொடா்ந்து திருமழிசையில் 194 காய்கறிக் கடைகள் அமைப்பதற்கான நடவடிக்கைகளை சிஎம்டிஏ மேற்கொண்டது. 

இருப்பினும், அந்தப் பணிகளில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து திருமழிசைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ள சந்தையில் வரும் ஞாயிற்றுக்கிழமை (மே 10) முதல் காய்கறி விற்பனை தொடங்கும் என கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனா். 

இந்த நிலையில் திருமழிசையில் அமையவிருக்கும் தற்காலிக மொத்த காய்மறி சந்தையை முதல்வர் பழனிசாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் நாளை மாலை 4.30 மணியளவில் ஆய்வு செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com