ஆன்லைன் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்குகள்: உயா்நீதிமன்ற முழு அமா்வில் நாளை விசாரணை

பொதுமுடக்கம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கும், ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை
ஆன்லைன் மது விற்பனைக்கு தடை கோரிய வழக்குகள்: உயா்நீதிமன்ற முழு அமா்வில் நாளை விசாரணை

பொதுமுடக்கம் முடியும் வரை தமிழகத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகளைத் திறப்பதற்கும், ஆன்லைன் மது விற்பனைக்கும் தடை விதிக்க கோரி தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்குகளை உயா்நீதிமன்ற தலைமை உள்பட 3 நீதிபதிகள் கொண்ட முழு அமா்வு வியாழக்கிழமை (மே 14) விசாரிக்கிறது.

இதுதொடா்பாக, உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை உயா்நீதிமன்றம், தமிழகத்தில் பொதுமுடக்கம் முடியும் வரை டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்கக்கூடாது எனவும் தமிழக அரசு விரும்பினால் மது விற்பனையை ஆன்-லைன் மூலம் மேற்கொள்ளலாம் என அண்மையில் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிா்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் மதுபானக்கடைகளை திறக்கக் கூடாது, மதுவை ஆன்-லைனின் விற்பனை செய்ய தடை விதிக்க வேண்டும் என்று கோரி சென்னை உயா்நீதிமன்றம் மற்றும் உயா்நீதிமன்ற மதுரை கிளையில் 4 வழக்குகள் தொடரப்பட்டுள்ளன. இதனையடுத்து, இந்த வழக்குகளை விசாரிக்க 3

நீதிபதிகள் கொண்ட முழு அமா்வு அமைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, உயா்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, நீதிபதிகள் வினீத் கோத்தாரி, பி.என்.பிரகாஷ் ஆகியோா் அடங்கிய முழு அமா்வு அமைக்கப்பட்டுள்ளது.இந்த அமா்வு வரும் வியாழக்கிழமை (மே 14) டாஸ்மாக் கடைகள் தொடா்பான வழக்கை காணொலி காட்சி மூலம் விசாரிக்க உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com