நலிவடைந்தோர்களைத் தேடிச்சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தன்னார்வலர்கள்

திருவள்ளூர் பகுதியில் கடந்த 45 நாள்களாக நலிவடைந்தோர்களை நேரில் சென்று அரிசி, மளிகை பொருள்கள்,
நலிவடைந்தோர்களைத் தேடிச்சென்று அத்தியாவசியப் பொருள்கள் வழங்கும் தன்னார்வலர்கள்

திருவள்ளூர் பகுதியில் கடந்த 45 நாள்களாக நலிவடைந்தோர்களை நேரில் சென்று அரிசி, மளிகை பொருள்கள், கிருமிநாசினி, முகக் கவசம் ஆகியவற்றை வழங்கும் இளைஞர்கள் தன்னார்வலர்கள் குழுக்களின் சேவையைப் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

கரோனா நோய் பரவாமல் தடுக்கும் வகையில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், பொதுமக்கள் எங்கும் வெளியில் செல்லாமல் வீட்டிற்குள்ளேயே முடங்யிருக்கின்றனர். இதேபோல், அன்றாடம் வேலை செய்து அதில் கிடைக்கும் வருவாயைக் கொண்டு குடும்பம் நடத்தும் இருளர்கள், நரிக்குறவர்கள் ஆகியோர் பாதிக்கப்பட்டதோடு, உணவிற்கு வழியின்றி அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதுபோன்ற நலிவடைந்த குடும்பங்களைச் சேர்ந்தோர்களை நேரில் தேடிச் சென்று அரிசி, மளிகை பொருள்களை வழங்கி பசி போக்கும் செயல்களில் இளைஞர்களான தன்னார்வலர்கள் குழுக்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

திருவள்ளூர் அருகே கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம், திருப்பந்தியூர் ஊராட்சிக்குள்பட்ட பண்ணுர் கிராமத்தைச் சேர்ந்த பிலிப் பிராங்க்ளின் தலைமையில் உமேஷ், இம்மானுவேல், ஜனாதனன் உள்ளிட்ட தன்னார்வலர்கள் குழுக்கள் நாள்தோறும் ஒவ்வொரு கிராமத்திற்குச் சென்று கரோனாவை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண பொருள்களையும் இலவசமாக வழங்கி வருகின்றனர்.

அந்த வகையில் பண்ணூர் கிராமத்தில் நலிவடைந்த இருளர் குடும்பத்தினருக்கு கரோனா நிவாரண பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தன்னார்வலர்கள் குழுக்கள் முதலில் கரோனா நோய்த் தொற்று குறித்து விளக்கமாக எடுத்துரைத்தனர். அதைத் தொடர்ந்து ஒவ்வொருவரும் நாள்தோறும் 10 தடவைகளுக்கு மேல் கை கழுவுதல், முககவசம் அணிந்து செல்வது பற்றி வலியுறுத்தினர். அதைத் தொடர்ந்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் 10 கிலோ அரிசி, சமையல் எண்ணெய், மளிகை பொருள்கள், முககவசம், கிருமி நாசினி, கைகழுவும் சோப்பு ஆகியவற்றையும் வழங்கினர். இதேபோல், இங்கு மட்டும் 80 குடும்பத்தினருக்கு வழங்கப்பட்டது. இதேபோல், கடந்த 45 நாள்களாக பொது முடக்கத்தின் போது நலிவடைந்த குடும்பத்தினருக்கு நிவாரண பொருள்களை வழங்கி வரும் இளைஞர்களைக் கொண்ட தன்னார்வலர்கள் குழுக்கள் சேவையை அக்கிராமத்தினர் பாராட்டியும் வருகின்றனர்.

இது குறித்து தன்னார்வலர்கள் குழுவைச் சேர்ந்த பிராங்கிளின் கூறுகையில், இதேபோல் கடந்த 45 நாள்களாக நலிவடைந்த குடும்பங்களைத் தேடிச் சென்று நாள்தோறும் 80 குடும்பங்கள் முதல் 100 குடும்பங்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள் கொண்ட நிவாரண பொருள்களை வழங்கி வருகிறோம். மேலும், 500 குடும்பங்களுக்கு வழங்கவும் உள்ளோம். இச்சேவையை ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊராட்சி அனுமதியுடனும், கிராமத்தில் உள்ள முதியவர்களின் வழிகாட்டுதலுடன் செய்து வருகிறோம். இந்த நலிவடைந்த குடும்பங்களுக்கு வழங்குவதற்காக சூசையர்புரம், இந்திரா நகர், அந்தோணியார் புரம், பண்ணுர், பழைய பண்ணுர், கண்ணியம்மன் நகர், உரியூர், புதுப்பட்டு, காந்தூர் மற்றும் கண்ணூர் ஆகிய கிராமங்களில் தேவையான நிவாரண பொருள்களையும் இலவசமாக வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com