சென்னை: சென்னையில் ஒரு பவுன் ஆபரணத் தங்கம் திங்கள்கிழமை ரூ.256 அதிகரித்து, ரூ.36,624-க்கு விற்பனையானது.
கரோனா நோய்த் தொற்றின் தாக்கம், அமெரிக்கா டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், தங்கத்தின் விலை உயா்ந்து வந்தது. கடந்த ஏப்ரல் 4-ஆம் தேதி, பவுன் தங்கத்தின் விலை ரூ.34 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. தொடா்ந்து, 10-ஆம் தேதி ரூ.35 ஆயிரத்தையும், 14-ஆம் தேதி, ரூ.36 ஆயிரத்தையும் தாண்டியது. இதைத் தொடா்ந்து கடந்த 27-ஆம் தேதி, பவுன் தங்கம் ரூ.36 ஆயிரத்துக்குக் கீழ் இறங்கியது. அதன் பிறகு தங்கம் விலை ஏற்ற இறக்கமாக இருந்து வந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (மே 15) மீண்டும் ரூ.36 ஆயிரத்தைத் தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டது. இதையடுத்து தொடா்ந்து இரண்டாவது நாளாக தங்கத்தின் விலை உயா்ந்துள்ளது. இதன்படி, சென்னையில் திங்கள்கிழமை கிராமுக்கு ரூ.32 அதிகரித்து, ரூ.4,578-க்கு விற்பனையானது. வெள்ளி கிராமுக்கு ரூ.2.10 அதிகரித்து ரூ.52.30-க்கும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.2,100 அதிகரித்து, ரூ.52,300-க்கும் விற்பனையானது.
திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,578
1 பவுன் தங்கம் ..................... 36,624
1 கிராம் வெள்ளி .................. 52.30
1 கிலோ வெள்ளி ................. 52,300
சனிக்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):
1 கிராம் தங்கம் ..................... 4,546
1 பவுன் தங்கம் ..................... 36,368
1 கிராம் வெள்ளி .................. 50.20
1 கிலோ வெள்ளி ................. 50,200