வாழப்பாடியில் இருந்து 76 வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 76 பேரை, வருவாய்த்துறையினர்
சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்.
சொந்த ஊருக்குச் செல்லும் வடமாநில தொழிலாளர்கள்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் தங்கியிருந்த உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் 76 பேரை, வருவாய்த்துறையினர் புதன்கிழமை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தனர். உதவிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு நன்றி தெரிவித்து தொழிலாளர்கள் நெகிழ்ச்சியை ஏற்படுத்தினர்.

வாழப்பாடி அடுத்த வெள்ளாளகுண்டம் தனியார் இரும்பு உருக்காலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பணிபுரிந்து வந்த உத்தரப் பிரதேசத்தை சேர்ந்த 50 பேர் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 26 பேர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தமிழக அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.

இதனையடுத்து, வாழப்பாடி வட்டாட்சியர் ஜானகி தலைமையிலான வருவாய்த்துறையினர், வாழப்பாடி பகுதியில் தங்கியுள்ள புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் குறித்துக் கணக்கெடுப்பு நடத்தி மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக அரசுக்கு அறிக்கை சமர்ப்பித்தனர்.

சொந்த ஊருக்குச் செல்ல தயாராகக் காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்.
சொந்த ஊருக்குச் செல்ல தயாராகக் காத்திருந்த வடமாநில தொழிலாளர்கள்.

முதற்கட்டமாக, வாழப்பாடி பகுதியிலிருந்து மேற்காணும் 76 தொழிலாளர்களையும், சிறப்பு ரயில் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய மாநில அரசுகள் அனுமதி வழங்கின. இதனையடுத்து, அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை வரவழைத்த வருவாய்த்துறையினர், தொழிலாளர்களை, புதன்கிழமை சேலம் ரயில்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கிருந்து சிறப்பு ரயில் மூலம், இத்தொழிலாளர்கள் அனைவரையும் இரவு 9 மணிக்கு சொந்த ஊருக்கு அழைத்துச் செல்லப்படுகின்றனர்.

வெள்ளாள குண்டம் கிராமத்தில் கடந்த 50 நாட்களாக தங்கியிருந்த போது தேவையான உதவிகளை வழங்கிய பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு மத்தியப் பிரதேசத்தை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தினர் நன்றி தெரிவித்து நெகிழ வைத்து விடைபெற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com