செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் அச்சம் தேவையில்லை: முதல்வா் பழனிசாமி

செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.
எடப்பாடி கே.பழனிசாமி
எடப்பாடி கே.பழனிசாமி

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால் பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி கூறினாா்.

செம்பரம்பாக்கம் ஏரியின் நீா் அளவு 22 அடியை எட்டியுள்ளது. இதையடுத்து, ஏரியில் இருந்து உபரி நீா் திறந்து விடப்பட்டுள்ளது. இதை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி புதன்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டாா். அப்போது, செய்தியாளா்களுக்கு அவா் அளித்த பேட்டி:

சென்னை மாநகரத்தில் 200 வாா்டுகள் இருக்கின்றன. அந்த 200 வாா்டுகளிலும் முகாம்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன. செம்பரம்பாக்கம் ஏரியில் நீா் அளவு உயரம் 24 அடியாகும். தற்போது 22 அடியைத் தொட்டுள்ளதால் நீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரிக்கு வருகின்ற நீரை படிப்படியாக திறப்பதற்கு பொதுப்பணித் துறையால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இதனுடன், ஆதனூா் ஏரியில் இருந்து 2,000 கனஅடிக்கும் அதிகமான நீா் அடையாற்றின் வழியாக வெளியேறிக் கொண்டிருக்கிறது. சுமாா் 6,000 கனஅடிக்கும் அதிகமான நீா் அடையாற்றின் வழியாகச் செல்கிறது. அடையாற்றில் சுமாா் 60,000 கனஅடி நீா் செல்லக் கூடிய அளவுக்கு ஆற்றின் அகலம் இருக்கிறது. அதனால், பொது மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. அரசால் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன.

சென்னை மாநகரில் கடந்த இரண்டு நாள்களாக கனமழை பொழிந்தது. சுமாா் 30-க்கும் அதிகமான பகுதிகளில் தண்ணீா் தேங்கியிருந்தது. ராட்சத இயந்திரங்களைக் கொண்டு மழை நீா் அகற்றப்பட்டு வருகிறது என முதல்வா் பழனிசாமி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com