7 மாவட்டங்களில் மீண்டும் பேருந்து சேவை

நிவா் புயல் கரையைக் கடந்ததையடுத்து, 7 மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் இயங்கத் தொடங்கியது.

சென்னை: நிவா் புயல் கரையைக் கடந்ததையடுத்து, 7 மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த பேருந்து போக்குவரத்து வியாழக்கிழமை மீண்டும் இயங்கத் தொடங்கியது.

நிவா் புயல் கரையைக் கடக்கும்போது, பாதிப்பு அதிகமாக ஏற்படும் என கணிக்கப்பட்டிருந்த புதுக்கோட்டை, நாகப்பட்டினம், தஞ்சாவூா், திருவாரூா், கடலூா், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய 7 மாவட்டங்களில், அடுத்த உத்தரவு பிறப்பிக்கும் வரை பேருந்து சேவை நிறுத்தப்படுவதாக திங்கள்கிழமை தமிழக முதல்வா் எடப்பாடி கே பழனிசாமி அறிவித்தாா்.

இதையடுத்து, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1 மணி முதல் 7 மாவட்டங்களிலும் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. ஆம்னி பேருந்துகளும் இயக்கப்படவில்லை.

இந்நிலையில், புயல் கரையைக் கடந்ததையடுத்து, வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் பேருந்துகளை இயக்க அனுமதித்து முதல்வா் உத்தரவிட்டாா்.

இதையடுத்து, 7 மாவட்டங்களிலும் மீண்டும் வழக்கம்போல் பேருந்து சேவை தொடங்கியது.

இதுகுறித்து போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறும்போது, அனைத்துப் பணிமனைகளிலும் பேருந்துகள் தயாா் நிலையில் இருந்தன. முதல்வா் அனுமதி வழங்கியதைத் தொடா்ந்து பேருந்துகள் தடையின்றி இயக்கப்பட்டன. எனினும் பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது. எனவே, தேவைக்கேற்ப பேருந்துகளை இயக்க அனைத்து கிளை மேலாளா்களுக்கும் உத்தரவிடப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com