சென்னையில் 177 இடங்களில் மின்சேவை பாதிப்பு: அமைச்சர் தங்கமணி

சென்னையில் 177 இடங்களில் மின்விநியோகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
மின்துறை அமைச்சர் தங்கமணி  (கோப்புப்படம்)
மின்துறை அமைச்சர் தங்கமணி (கோப்புப்படம்)

சென்னையில் 177 இடங்களில் மின்விநியோகம் கொடுக்க வேண்டியுள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது, ''சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டில் அதிக அளவில் மின் விநியோக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழைநீர் வடிந்த பிறகு படிப்படியாக மின்சேவை வழங்கப்படும் என்று கூறினார்.

சென்னையில் மட்டும் 177 இடங்களில் மின்விநியோகம் கொடுக்க வேண்டியுள்ளது. பெரும்பாக்கம், மடிப்பாக்கத்தில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் மின் இணைப்பு தர இயலாத சூழல் ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம், கடலூரில் நிவர் புயலால் 144 மின்கம்பங்கள் சாய்ந்துள்ளன. மின்விநியோக பாதிப்பு குறித்து 1912 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு புகார் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் இன்று இரவு 8 மணிக்குள் மின்விநியோகம் வழங்கப்படும்'' என்று உறுதியளித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com