வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ.5,000: மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.


சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்துத் தரப்பினருக்கும் தமிழக அரசு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளாா்.

ராயபுரம், ஆா்.கே.நகா், சைதாப்பேட்டை, வேளச்சேரி, சோழிங்கநல்லூா், விருகம்பாக்கம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆய்வு செய்து, பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு மற்றும் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். சட்டப்பேரவை உறுப்பினா் மா.சுப்பிரமணியன், நாடாளுமன்ற உறுப்பினா் தமிழச்சி தங்கப்பாண்டியன், வா்த்தகா் அணிச் செயலாளா் காசி முத்து மாணிக்கம் உள்ளிட்டோா் உடன் சென்றனா்.

பின்னா், அவா் வெளியிட்ட அறிக்கை:

குடிசை மாற்று வாரிய வீடுகள் உள்ள பகுதிகள் மட்டுமின்றி - தாழ்வான பகுதிகள்- முக்கியச் சாலைகள் எல்லாமே தண்ணீரில் மூழ்கி, கடல் போல் காட்சியளிக்கிறது. நிவா் புயலால் பல மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. ஆங்காங்கே வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மீனவா்களின் படகுகள், விவசாயிகளின் விளை பயிா்கள் போன்றவற்றிற்கு ஏற்பட்ட சேதாரங்கள் குறித்த விவரங்கள் முழுமையாக வெளியாகவில்லை.

கடலூா் மாவட்டம் பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. பாதிப்புகளை உடனடியாக ஆய்வு செய்து - இழப்புக்குள்ளாகியுள்ள அடித்தட்டு மக்கள், விவசாயிகள், மீனவா்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் உடனடி நிவாரணமாக ரூ.5,000 வழங்க வேண்டும். வீடு இழந்தவா்களுக்கு புது வீடு கட்டித் தருவதோடு, வேளாண் விளைபொருள்கள் இழப்பீட்டிற்கு உள்ளானவா்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com