புதுவையில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சி: ரங்கசாமி விமரிசனம்

இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் மிக மிக மோசமான ஆட்சி நடக்கிறது என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி விமரிசனம் செய்துள்ளார்.
புதுவையில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சி: ரங்கசாமி விமரிசனம்
புதுவையில் இதுவரை இல்லாத மோசமான ஆட்சி: ரங்கசாமி விமரிசனம்


புதுச்சேரி: இதுவரை இல்லாத அளவுக்கு புதுவையில் மிக மிக மோசமான ஆட்சி நடக்கிறது என்று என்.ஆர். காங்கிரஸ் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான என்.ரங்கசாமி விமரிசனம் செய்துள்ளார்.

புதுவையில் பழைய கூட்டணியே தொடரும் என்று அதிமுக, பாஜக கூட்டணி குறித்து ரங்கசாமி வியாழக்கிழமை சூசகமாக அறிவித்தார். இதனால் உற்சாகம் அடைந்த அதிமுகவினர் புதுவை கிழக்கு மாநில அதிமுக செயலர் ஆ.அன்பழகன் தலைமையில் ரங்கசாமியை வெள்ளிக்கிழமை மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினர்.

இதைத்தொடர்ந்து எதிர்க்கட்சித் தலைவர் ரங்கசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது: மரியாதை நிமித்தமான சந்திப்புக்காக அதிமுக எம்எல்ஏக்கள் வந்தனர். பாஜக, அதிமுக கூட்டணியில் என்.ஆர்.காங்கிரஸ் தொடர்கிறது.

முதல்வர் நாராயணசாமி அவரது பணியைச் சரியாகச் செய்ய வேண்டும். அவர் முதலில் அரசை சரியாக நடத்தட்டும். அவர் பொறுப்பு ஏற்றது முதல் ஆளுநரை தான் குறைகூறி ஆட்சி நடத்துகிறார்.

மக்கள் நலனில் அக்கறை எடுத்து மற்றவர் மீது பழியைப் போடாமல் ஆட்சி நடத்தட்டும். இதுவரை இல்லாத மிக மிக மோசமான ஆட்சி இது. புதிய திட்டம் ஏதும் கொண்டு வரவில்லை. நாங்கள் தொடங்கிவைத்த திட்டங்களை தான் செய்கிறார்கள். ஒரு புதிய அடிக்கல் கூட நாட்டவில்லை. முதல்வர் நாராயணசாமி மற்றவர்கள் மீது பழி போட்டுத் தப்பிக்கக் கூடாது.

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்பது மக்களுக்கே தெரியும். எங்களுடைய கடந்த கால ஆட்சியையும், தற்போதைய ஆட்சியையும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி வாய்ப்பு எங்கள் கூட்டணிக்குப் பிரகாசமாக இருக்கும் என்றார் ரங்கசாமி.

அதிமுக கட்சி கொறடா வையாபுரி மணிகண்டன் எம்.எல்.ஏ., ஆ.பாஸ்கர் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com