மதுரை வைகை ஆற்றில் பெருக்கெடுத்த நுரை: வாகன ஓட்டிகளுக்கு இடையூறு

மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் வைகை ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
வைகை ஆற்றில் பெருக்கெடுத்த நுரை
வைகை ஆற்றில் பெருக்கெடுத்த நுரை

மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பெய்த கனமழையால் வைகை ஆற்றில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.

மதுரை நகரம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. தல்லாகுளம், கோரிப்பாளையம், சிம்மக்கல. பெரியார் நிலையம், காளவாசல், கூடல்புதூர் உள்ளிட்ட நகரப்பகுதிகளிலும் சோழவந்தான், தேனூர், வாடிப்பட்டி, திருமங்கலம், உசிலம்பட்டி உள்ளிட்ட மாவட்டத்தின் இதர பகுதிகளிலும் நல்ல மழை பெய்தது.

இதனால் பல்வேறு ஒடைகளில் பெருக்கெடுத்த மழைநீர் வைகை ஆற்றில் கலந்தது. வைகை ஆற்றில் சனிக்கிழமை அதிகாலை முதல் 2 அடிக்கு மேல் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது. ஆழ்வார்புரம் ஏவி பாலம் பகுதியில் உள்ள தரைப்பாலம் மூடப்பட்டு போக்குவரத்துக்குத் தடை விதிக்கப்பட்டது. தரைப்பாலத்தின் இரு பகுதிகளிலும் காவல்துறையினர் சாலை தடுப்புகள் வைத்து போக்குவரத்தை நிறுத்தினர்.

வைகை ஆற்றில் ஏவி்பாலம் பகுதியில் ஆகாயத் தாமரை அதிகளவில் படர்ந்து காணப்பட்டதால் தரைப்பால தூம்புகளில் தண்ணீர் வெளியேறுவதில் தடை ஏற்பட்டது. அதையடுத்து மாநகராட்சியினர் இயந்திரங்கள் மூலம் ஆகாய தாமரைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

சாத்தையாறு மற்றும் மலையடிவாரப் பகுதியிலிருந்து நீர்வரத்து அதிகரித்த காரணமாக செல்லூர் கண்மாய் நிரம்பி உபரி நீர் வெளியேறியது. செல்லூர் கண்மாய் ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள வீடுகளிலிருந்து கழிவுநீர் இந்த கண்மாயில் கலக்கப்படுகிறது. மழைநீருடன் கழிவுநீரும் கலந்து பெருக்கெடுத்து வெளியேறிய நிலையில் மீனாட்சிபுரம் பாலத்தை ஒட்டி அதிக அளவில் நுரை பொங்கிப் பரவியது

போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு நுரை படர்ந்து இருந்த காரணத்தால் தீயணைப்பு படையினர் வரவழைக்கப்பட்டு தண்ணீரை பீய்ச்சி அடித்து நுரையை அடங்கச் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com