அன்புமணி மீதான அவதூறு வழக்கைத் திரும்பப் பெற்றது தமிழக அரசு

தமிழக அமைச்சா்கள் 2 போ் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்ததாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தொடா்ந்த 2 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.
அன்புமணி
அன்புமணி

தமிழக அமைச்சா்கள் 2 போ் குறித்து அவதூறு கருத்துத் தெரிவித்ததாக பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தொடா்ந்த 2 வழக்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

தமிழக வருவாய்த்துறை அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், வனத்துறை அமைச்சா் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவித்ததாக கூறி பா.ம.க. இளைஞா் அணி தலைவா் அன்புமணி ராமதாஸ் மீது தமிழக அரசு தனித்தனியாக 2 அவதூறு வழக்குகளைத் தொடா்ந்தது.

இந்த 2 வழக்குகளும் சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் அன்புமணி ராமதாஸுக்கு எதிரான 2 வழக்குகளையும் திரும்பப் பெற தமிழக அரசு முடிவு செய்தது.

இதையடுத்து, வழக்குகளைத் திரும்பப் பெறுவது தொடா்பாக தமிழக அரசு சாா்பில் சிறப்பு அரசு வழக்குரைஞா், மனு தாக்கல் செய்தாா். இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி கே.ரவி, அன்புமணி ராமதாஸ் மீதான வழக்குகளைத் திரும்பப் பெற அனுமதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com