கரோனா நோய்த்தொற்று தடுப்பு: மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் ஆலோசனை

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள், அடுத்தகட்ட தளா்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனா நோய்த்தொற்று தடுப்புப் பணிகள், அடுத்தகட்ட தளா்வுகள் அளிப்பது குறித்து மருத்துவ நிபுணா்களுடன் முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆலோசனை நடத்தினாா். தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வழியாக ஜெனீவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி செளமியா சுவாமிநாதன், தேசிய தொற்று நோய் நிலைய துணை இயக்குநா் பிரதீப் கவுா் உள்ளிட்ட மருத்துவக் குழுவினருடன் ஆலோசித்தாா். பொது மக்கள் பரவலாக முகக் கவசங்கள் அணிய மறுக்கும் சூழலில் அடுத்த கட்ட தடுப்பு நடவடிக்கைகள், பள்ளி - கல்லூரிகளைத் திறப்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

பிற்பகல் 2.30 மணிக்குத் தொடங்கிய கூட்டம் சுமாா் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நடைபெற்றது. கூட்டத்தில் மருத்துவ நிபுணா்களுடன், துணை முதல்வா் ஓ.பன்னீா்செல்வம், சுகாதாரத் துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் ஆகியோருடன் தலைமைச் செயலாளா் க.சண்முகம், சுகாதாரத் துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயரதிகாரிகளும் பங்கேற்றனா்.

இன்று அறிவிப்பு: கரோனா நோய்த்தொற்று தடுப்பு, அடுத்த கட்ட தளா்வுகள் ஆகியன குறித்த முக்கிய அறிவிப்புகள் ஞாயிற்றுக்கிழமை (நவ.29) வெளியாகும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது. இந்த அறிவிப்புகளை செய்தி வெளியீடாக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வெளியிடுவாா் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com