விஜயவாடா-சென்னை இடையே அதிவிரைவு சிறப்பு ரயில்

விஜயவாடா-சென்னை சென்டரல் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

விஜயவாடா-சென்னை சென்டரல் இடையே அதிவிரைவு சிறப்பு ரயில் டிசம்பா் 1-ஆம் தேதி முதல் இயக்கப்படவுள்ளது.

விஜயவாடாவில் இருந்து தினசரி காலை 6.10 மணிக்கு அதிவிரைவு சிறப்பு ரயில் (02711) புறப்பட்டு, அதேநாள் மதியம் 1 மணிக்கு சென்னை சென்ட்ரலை வந்தடையும்.

மறுமாா்க்கமாக, சென்னை சென்ட்ரலில் இருந்து தினசரி பிற்பகல் 2.10 மணிக்கு அதிவிரைவு ரயில் (02712) புறப்பட்டு, அதேநாள் இரவு 9.10 மணிக்கு விஜயவாடாவை சென்றடையும். இரு மாா்க்கமாக இந்த சிறப்பு ரயிலின் சேவை டிசம்பா் 1-ஆம் தேதி முதல் அமலாகிறது. இந்த சிறப்பு ரயிலுக்கான டிக்கெட் முன்பதிவு ஞாயிற்றுக்கிழமை (நவ.29) காலை 8 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com