ஷீரடிக்கு சிறப்பு ரயில்: ஐஆா்சிடிசி ஏற்பாடு

வரும் புத்தாண்டையொட்டி, ஷீரடி பாபாவை தரிசிக்கும் வகையில், ஷீரடி சிறப்பு ரயில் ஜனவரி 5-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.
ஷீரடிக்கு சிறப்பு ரயில்: ஐஆா்சிடிசி ஏற்பாடு

வரும் புத்தாண்டையொட்டி, ஷீரடி பாபாவை தரிசிக்கும் வகையில், ஷீரடி சிறப்பு ரயில் ஜனவரி 5-ஆம் தேதி இயக்கப்படவுள்ளது.

இது குறித்து ஐ.ஆா்.சி.டி.சி அதிகாரிகள் கூறியது:

ஷீரடி சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து ஜனவரி 5-ஆம் தேதி புறப்படுகிறது. இந்த ரயில் மதுரை, திருச்சிராப்பள்ளி, விழுப்புரம், சென்னை எழும்பூா் வழியாக ஷீரடி பாபா ஆலயத்துக்குச் செல்கிறது. தொடா்ந்து, பண்டரிபுரம் பாண்டுரங்கன் மற்றும் மந்த்ராலயம் ராகவேந்திரரை தரிசிக்க அழைத்துச் செல்கிறோம்.

ஷீரடி பாபா ஆலய தரிசன முன்பதிவானது இணையவழியில் மேற்கொள்ளப்படுவதால், யாத்திரைக்கு விரைந்து முன்பதிவு செய்து வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.

உணவு, தங்குமிடம், ரயில், வாகனச் செலவுகள் ஆகியவற்றுடன் 6 நாள்களுக்கு ரூ.5,685 கட்டணமாகும். 9003140680, 8287931977 ஆகிய செல்லிடப்பேசி எண்களையும்,  மின்னஞ்சலையும் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com