சூலூரில் கரோனா பாதித்த இடங்களில் பரிசோதனை முகாம்கள்

சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா தொற்று நோய்ப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறையினர் நோய்த் தொற்று பரிசோதனையில் ஈடுபட்டனர்.
சூலூரில் கரோனா பாதித்த இடங்களில் பரிசோதனை முகாம்கள்
சூலூரில் கரோனா பாதித்த இடங்களில் பரிசோதனை முகாம்கள்

சூலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வியாழக்கிழமை கரோனா தொற்று நோய்ப் பரவல் அதிகம் உள்ள இடங்களில் சுகாதாரத்துறையினர் நோய்த் தொற்று பரிசோதனையில் ஈடுபட்டனர்.

சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரோனா தொற்று நோய் பரவலைக் கட்டுப்படுத்த அரசு அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை சூலூர் பகுதிகளில் கரோணா தொற்று நோய் பாதிக்கப்பட்ட இடங்களைக் கண்டறிந்து அந்த இடங்களுக்கு அருகில் உள்ளவர்களுக்குப் பரிசோதனை மேற்கொள்ள சுகாதாரத்துறையினர் அறிவுறுத்துகின்றனர். 

இந்த முகாமானது முதல் கட்டமாக சூலூர் மற்றும் சின்னியம்பாளையம் பகுதிகளில் நடைபெறுகிறது. இத்தகைய பரிசோதனையில் 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்களும், சளி, காய்ச்சல், உடல் வலி மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் கட்டாயம் வந்து பரிசோதித்துக்கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் வேண்டுகோள் விடுக்கின்றனர். 

இத்தகைய முகாம்கள் நடைபெறும் இடங்கள் அந்தந்த பேரூராட்சி மற்றும் பஞ்சாயத்து மூலமாக பொதுமக்களுக்கு தெரிவிக்கப்படுகின்றன. சூலூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேருக்கு கரோனா தொற்று நோய் பரவி உள்ளது. அவர்களில் 60 வயது முதியவர் கோமா நிலையிலிருந்து உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  தமிழக அரசின் சுகாதாரத்துறை பரிசோதனை முகாம்கள் மூலமாகப் பொதுமக்கள் பயன்பெற வேண்டுமாய் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com